ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார் தங்க மகன்! நீரஜ் சோப்ரா

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 07, 2021 | கருத்துகள் (17+ 88)
Share
Advertisement
டோக்கியோ:இந்தியாவுக்கு நேற்று பொன்னான நாள். டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் அசத்திய நீரஜ் சோப்ரா, தங்கம் வென்றார். இதன் வாயிலாக, ஒலிம்பிக் தடகள வரலாற்றில், முதல் பதக்கம் வென்று இந்தியா வரலாறு படைத்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. நேற்று நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பைனலில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, 23, பங்கேற்றார். இவர்,
ஒலிம்பிக்,தங்கம் , தங்க மகன்!  நீரஜ் சோப்ரா

டோக்கியோ:இந்தியாவுக்கு நேற்று பொன்னான நாள். டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் அசத்திய நீரஜ் சோப்ரா, தங்கம் வென்றார். இதன் வாயிலாக, ஒலிம்பிக் தடகள வரலாற்றில், முதல் பதக்கம் வென்று இந்தியா வரலாறு படைத்தது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. நேற்று நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பைனலில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, 23, பங்கேற்றார். இவர், தகுதிச் சுற்றில் அதிகபட்சமாக, 86.65 மீ., துாரம் எறிந்து முதலிடம் பிடித்ததால், எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.


*2வது வாய்ப்பில் உறுதிபைனலில் நீரஜ் சோப்ரா, ஜெர்மனியின் ஜூலியர் வெபர், ஜோகனஸ் வெட்டர் உட்பட 12 பேர் பங்கேற்றனர். முதல் வாய்ப்பில், 87.03 மீ., துாரம் எறிந்த நீரஜ் முதலிடம் பிடித்தார். தொடர்ந்து இரண்டாவது வாய்ப்பில், 87.58 மீ., துாரம் எறிந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார். அப்போதே, தங்கம் பெறும் வாய்ப்பு பிரகாசமானது. ஆறு சுற்று வாய்ப்பு முடிவில், அதிகபட்சமாக, 87.58 மீ., துாரம் எறிந்து முதலிடம் பிடித்த நீரஜ் சோப்ரா, தங்கப் பதக்கத்தை வென்றார். அடுத்த இரு இடங்களை செக் குடியரசின் ஜாகூப் வாட்லெச் - 86.67 மீ., செக் குடியரசின் விடேஸ்லாவ் வெஸ்லி - 85.44 மீ., ஆகியோர் கைப்பற்றினர்.


*நுாற்றாண்டு கனவு
ஒலிம்பிக்கில், 1920 முதல் இந்தியா பங்கேற்கிறது. இதன் தடகளத்தில் பதக்கம் வெல்வது இந்தியாவுக்கு எட்டாக்கனியாக இருந்தது. 1960ல் 'பறக்கும் சீக்கியர்' என போற்றப்பட்ட மறைந்த மில்கா சிங் - 400 மீ., ஓட்டம், 1984ல் பி.டி.உஷா - 400 மீ., தடை ஓட்டம், ஆகியோர் நுாலிழையில் பதக்கத்தை கோட்டை விட்டனர். இவர்களது லட்சிய கனவை தற்போது நீரஜ் சோப்ரா நிறைவேற்றியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில், இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்று தந்த இவர், ஒலிம்பிக் தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.


நம்ப முடியவில்லை

நீரஜ் சோப்ரா கூறுகையில், ''நீண்ட காலத்துக்கு பின் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. அதிலும், தடகளத்தில் முதல் முறையாக தங்கம் கிடைத்திருக்கிறது. இது எனக்கும், நாட்டுக்கும் பெருமையான தருணம். ''தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்டேன். இதனால், பைனலில் இன்னும் அதிகமான துாரத்திற்கு ஈட்டி எறிய முடியும் என நம்பினேன். ஆனால், தங்கம் வெல்வேன் என தெரியாது. தங்கம் வென்றது நம்ப முடியாத உணர்வை தருகிறது,'' என்றார்.


*பிரதமர் வாழ்த்துபிரதமர் மோடி வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில், 'டோக்கியோவில் வரலாறு எழுதப்பட்டுள்ளது. நீரஜ் சோப்ராவின் சாதனை எப்போதும் நினைவில் இருக்கும். இளம் நீரஜ் தனித்தன்மையுடன் சிறப்பாக விளையாடினார். இணையற்ற உறுதியுடன் திறமை வெளிப்படுத்தினீர்கள். தங்கம் வென்ற உங்களுக்கு வாழ்த்துகள்' என தெரிவித்துள்ளார்.


*ராணுவ வீரர்
நீரஜ் சோப்ரா 19 வயதில், போலந்தில் நடைபெற்ற உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் பிரிவில், 86.48 மீ., துாரம் எறிந்து புதிய உலக சாதனை படைத்தார். பின், கல்லுாரி படிப்பை கைவிட்டு, இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷனர் அதிகாரி பணியில் சேர்ந்தார்.
ராணுவத்தில் கிடைத்த சம்பளத்தை வீட்டுக்கு கொடுத்து விடுவார். இதுகுறித்து அவர் அப்போது கூறுகையில், ' எங்கள் குடும்பத்தில் யாருமே அரசு பணியில் இல்லை. ராணுவத்தில் இணைந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். என் சம்பளத்தை வீட்டிற்கு கொடுத்ததால் பணப் பிரச்னை தீர்ந்தது' என்றார்.


latest tamil news

*விவசாயி மகன்ஈட்டி எறிதலில் பைனலுக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா, ஹரியானாவின் பானிபட் அருகிலுள்ள கந்த்ரா கிராமத்தை சேர்ந்தவர். இவரது அப்பா விவசாயி. 12 வயதில் உடல் பருமன் காரணமாக அவதிப்பட்ட நீரஜ், 90 கிலோ எடை இருந்தார். பிறகு 'ஜிம்' சென்ற இவர், காலை நேரங்களில் 'ஜாகிங்' செல்லுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். ஒருநாள் ஈட்டி எறிதல் வீரர் ஜாய் சவுத்ரியை சந்தித்தார். அன்று, வாழ்க்கை திசை மாறியது. 2016ல் ஜூனியர் பிரிவில் உலக சாதனை படைத்தார். துவக்க கால தோனியைப் போல முடி வளர்த்திருந்த நீரஜ், தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் உடல் எடையை மட்டுமல்ல, முடியையும் ஒட்ட வெட்டி விட்டார்.


*91 செ.மீ., வித்தியாசம்நீரஜ் சோப்ரா சாதாரணமாக சாதித்து விடவில்லை. இரண்டாவதாக வந்த செக் குடியரசு வீரர் ஜாகுப்பை விட 91 செ.மீ., துாரம் அதிகமாக எறிந்து தங்கம் வென்றுள்ளார். தவிர, 87.03 மீ., மற்றும் 87.58 மீ., என இரு முறை எறிந்தார். வெள்ளி வென்ற ஜாகுப், அதிகபட்சம் 86.67 மீ., தான் எறிந்தார்.*இது 'பெஸ்ட்!'டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என, 7 பதக்கங்கள் கிடைத்தன. இது, ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவுக்கு கிடைத்த அதிகபட்ச பதக்கம்.
இதற்கு முன், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 2 வெள்ளி, 4 வெண்கலம் என, 6 பதக்கம் கிடைத்திருந்தது. இதில் விஜய் குமார் - துப்பாக்கி சுடுதல், சுஷில் குமார் - மல்யுத்தம் ஆகியோர் தலா ஒரு வெள்ளி, சாய்னா நேவல் - பாட்மின்டன், மேரி கோம் - குத்துச்சண்டை, ககன் நாரங் - துப்பாக்கி சுடுதல், யோகேஷ்வர் தத் - மல்யுத்தம், தலா ஒரு வெண்கலம் கைப்பற்றினர்.


*இதுவரை 35இதுவரை ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவுக்கு 10 தங்கம், 9 வெள்ளி, 16 வெண்கலம் என, மொத்தம் 35 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில் ஹாக்கியில் மட்டும் 8 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என, 13 பதக்கங்கள் கிடைத்தன. தனிநபரில் அபினவ் பிந்த்ரா - துப்பாக்கி சுடுதல், நீரஜ் - ஈட்டி எறிதலில் தலா ஒரு தங்கம் வென்றுள்ளனர்.


ஒலிம்பிக் வீரர்களுக்கு கவர்னர், முதல்வர் வாழ்த்து
* தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்: ஒலிம்பிக் போட்டியில், ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கும், மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கும், இதயப்பூர்வமான வாழ்த்துகள். அவர்களால் பெருமை அடைந்துள்ளோம்.

* முதல்வர் ஸ்டாலின்: இந்திய வரலாற்றில், ஒரு மகத்தான நாள். தடகளப் போட்டிகளில், ஒலிம்பிக் தங்கம் வெல்லும், இந்தியாவின், 120 ஆண்டு கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்த, நீரஜ் சோப்ராவுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். நுாறு கோடி இதயங்களில், ஒரு புதிய நம்பிக்கை உணர்வை, நீங்கள் விதைத்துள்ளீர்கள். உண்மையிலேயே நீங்கள் நாட்டின் நாயகன். அத்துடன், இந்தியாவுக்கு ஆறாவது பதக்கத்தை பெற்று தந்துள்ள, மற்போர் வீரர் பஜ்ரங் பூனியாவுக்கு வாழ்த்துக்கள்.

* பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ள, ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுக்கள். ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில், 100 ஆண்டுகளுக்கு பின், இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்த, அவரது சாதனை ஈடு இணையற்றது. ஒலிம்பிக் போட்டிகளில், இதுவரை தங்கம் கிடைக்கவில்லை என்ற குறையை, நீரஜ் சோப்ரா நீக்கி உள்ளார். அவரது சாதனைப் பயணம் தொடரட்டும். ஒலிம்பிக்கில், இந்தியாவின் தங்க வேட்டை நீடிக்கட்டும்.

Advertisement
வாசகர் கருத்து (17+ 88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil - Bangalore,இந்தியா
08-ஆக-202121:06:07 IST Report Abuse
Senthil அடுத்த olympics லாவது , இந்தியா குறைந்த பட்சம் , ஒரு இருபது தங்க மகன் , மகள் உருவாக்கும் வேலையை உடனே துவங்க வேண்டும் , 48 ஆவது இடம் ரொம்ப கேவலமாக உள்ளது .
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
08-ஆக-202114:09:32 IST Report Abuse
konanki இந்த ஆரிய வந்தேறி சூழ்ச்சியை முறியடிக்க கலகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து 95 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டுமென போராட்டம் ஆர்பாட்டம் நடத்தும்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
08-ஆக-202114:07:37 IST Report Abuse
konanki சூப்பர் பச்சை சார். எங்க இன்பண்ணா முன்னால் இந்த நீரஜ் எல்லாம் சோப்ளாங்கி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X