வீரர்கள் தயாராக இருக்க தளபதி எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீரர்கள் தயாராக இருக்க தளபதி எச்சரிக்கை

Added : ஆக 07, 2021
Share
தஞ்சாவூர்:''விமானப்படை வீரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்,'' என, விமானப் படையின் தென் மண்டல தலைமை தளபதி மன்வேந்திர சிங் தெரிவித்தார். தஞ்சாவூர் விமானப் படை தளத்திற்கு வந்த மன்வேந்திர சிங், வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று பேசியதாவது: கொரோனா தொற்றை எதிர்கொள்ள மருத்துவ பொருட்கள், ஆக்சிஜன் சிலிண்டர் போன்றவற்றை முறையாக
 வீரர்கள் தயாராக இருக்க தளபதி எச்சரிக்கை

தஞ்சாவூர்:''விமானப்படை வீரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்,'' என, விமானப் படையின் தென் மண்டல தலைமை தளபதி மன்வேந்திர சிங் தெரிவித்தார்.

தஞ்சாவூர் விமானப் படை தளத்திற்கு வந்த மன்வேந்திர சிங், வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று பேசியதாவது: கொரோனா தொற்றை எதிர்கொள்ள மருத்துவ பொருட்கள், ஆக்சிஜன் சிலிண்டர் போன்றவற்றை முறையாக வினியோகம் செய்ய, விமானப்படை வீரர்கள் மேற்கொண்ட சிறப்பான பணி பாராட்டத்தக்கது.

கிழக்கு மற்றும் மேற்கத்திய கடற்பகுதியில் இந்திய விமானப் படையும், அமெரிக்க கடற்படையும் இணைந்து மேற்கொண்ட கூட்டுப் பயிற்சியில் முன்னிலை வகித்த வீரர்களைப் பாராட்டுகிறேன். எல்லை பிரச்னைகள் தீர்க்கப்படாத நிலையில், விமானப்படை வீரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பணியாற்றுவதற்கான திறன், நெகிழ்வுத் தன்மையுடன் தயாராக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பின், விமானப்படை தளத்தில் நடந்து வரும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை, அவர் ஆய்வு செய்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X