இந்தியா

ஜூஸ் கடைக்காரர் சாவு: போலீசார் விசாரணை

Added : ஆக 07, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில் குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்த ஜூஸ் கடைக்காரர் வீட்டில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அரியாங்குப்பம், இருசாம்பாளையம் சாலை சீனுவாச நகரை சேர்ந்தவர் பெருமாள், 42. அரியாங்குப்பம் மார்க்கெட்டில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி, இரண்டு மகள்களுடன் பிரிந்து சென்றுவிட்டார். அதனால் பெருமாள் மன

அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில் குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்த ஜூஸ் கடைக்காரர் வீட்டில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியாங்குப்பம், இருசாம்பாளையம் சாலை சீனுவாச நகரை சேர்ந்தவர் பெருமாள், 42. அரியாங்குப்பம் மார்க்கெட்டில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி, இரண்டு மகள்களுடன் பிரிந்து சென்றுவிட்டார். அதனால் பெருமாள் மன உளைச்சலில் இருந்து வந்தார்.கடந்த சில நாட்களாக அவரது ஜூஸ் கடை திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அவரது அண்ணன் முருகன், நேற்று முன்தினம் பெருமாள் வீட்டுக்கு சென்று பார்த்தார். கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப் பட்டிருந்தது.கதவை உடைத்த பார்த்தபோது, படுத்த நிலையில் பெருமாள் இறந்து கிடந்தார். அரியாங்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X