இந்தியா

கொரோனா தொற்றால் 1,800 பேர் பலி

Added : ஆக 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை 1,800 ஆக உயர்ந்துள்ளது.புதுச்சேரியில் நேற்று முன்தினம் 5,521 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21

புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை 1,800 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் நேற்று முன்தினம் 5,521 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது.இவர்களில், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 841 பேர் நோய் தொற்றில் இருந்து குணமாகி உள்ளனர். தற்போது, 176 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 706 பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், மூலக்குளத்தை சேர்ந்த 35 வயது வாலிபர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை 1,800 ஆக உயர்ந்துள்ளது.மாநிலத்தில் தொற்று சதவீதம் 1.85 ஆகவும், இறப்பு சதவீதம் 1.48 ஆக உள்ளது. குணமடைவோர் சதவீதம் 97.79 ஆக உள்ளது.நேற்று முன்தினம் வரை மொத்தம் 5,83,090 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்களில், 1,48,280 பேர் இரு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X