கருணாநிதி நினைவுநாள் அனுசரிப்பு | Dinamalar

இந்தியா

கருணாநிதி நினைவுநாள் அனுசரிப்பு

Added : ஆக 07, 2021
Share
புதுச்சேரி : மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவுநாள், தி.மு.க., சார்பில் நேற்று அனுசரிக்கப் பட்டது.புதுச்சேரி தெற்கு தி.மு.க., சார்பில், அண்ணா சிலை அருகில் நடந்த நிகழ்ச்சியில், கருணாநிதி உருவப் படத்திற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ, மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், மாநில பொருளாளர் சண்குமாரவேல்,

புதுச்சேரி : மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவுநாள், தி.மு.க., சார்பில் நேற்று அனுசரிக்கப் பட்டது.

புதுச்சேரி தெற்கு தி.மு.க., சார்பில், அண்ணா சிலை அருகில் நடந்த நிகழ்ச்சியில், கருணாநிதி உருவப் படத்திற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ, மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், மாநில பொருளாளர் சண்குமாரவேல், இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனுாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.வடக்கு தி.மு.க., சார்பில் மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் தலைமையில், கட்சி தலைமை அலுவலகத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

பொதுக் குழு உறுப்பினர் பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளர் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.குருவிநத்தத்தில் பாகூர் எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமையில், கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் பல்வேறு தொகுதிகளிலும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு தி.மு.க.,வினர் மரலஞ்சலி செலுத்தினர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X