இந்தியா

மீனவரை தாக்கிய வாலிபர்களுக்கு வலை

Added : ஆக 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மீனவரை தாக்கிய மூன்று வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் நடிகர் பிரபுதேவா நடிக்கும் செல்டா சினிமா பட ஷூட்டிங் கடந்த 6ம் தேதி நடந்தது.ஷூட்டிங்கை பார்க்க, இரவு 9.00 மணிக்கு சோலை நகர் தெற்கு பகுதியை சேர்ந்த சரண்வேல்,25, ஆகாஷ்,28, சந்தோஷ்,23, ஆகியோர் சென்றனர். அவர்களை சோலைநகரை சேர்ந்த மீனவர் இருசப்பன்,58, மறித்து, நீங்கள் யார்

புதுச்சேரி : மீனவரை தாக்கிய மூன்று வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் நடிகர் பிரபுதேவா நடிக்கும் செல்டா சினிமா பட ஷூட்டிங் கடந்த 6ம் தேதி நடந்தது.ஷூட்டிங்கை பார்க்க, இரவு 9.00 மணிக்கு சோலை நகர் தெற்கு பகுதியை சேர்ந்த சரண்வேல்,25, ஆகாஷ்,28, சந்தோஷ்,23, ஆகியோர் சென்றனர். அவர்களை சோலைநகரை சேர்ந்த மீனவர் இருசப்பன்,58, மறித்து, நீங்கள் யார் எந்த ஊர் என விசாரித்தார்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சரண்வேல் உள்ளிட்ட மூவரும் இருசப்பனை திட்டி, கருங்கற்களால் தாக்கி விட்டு, தப்பிச் சென்றனர்.இருசப்பன் கொடுத்த புகாரின்பேரில், சரண்வேல் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிந்து, முத்தியால்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X