இந்தியா

பைனான்சியரை தாக்கிய கும்பலுக்கு வலைவீச்சு

Added : ஆக 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பைனான்சியரை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, கோவிந்தசாலை புது நகரை சேர்ந்தவர் குமார், 52; பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த 5ம் தேதி காலை 11.00 மணியளவில் அண்ணா சாலை டெம்போ ஸ்டாண்டில் ஜோதி என்பவரிடம் பைனான்ஸ் தொகை வசூல் செய்தார்.அப்போது, ஜோதி மீண்டும் 5 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டார். ஏற்கனவே வாங்கியதில் மீதி தொகையை கட்டி முடித்தால், கடன்

புதுச்சேரி : பைனான்சியரை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, கோவிந்தசாலை புது நகரை சேர்ந்தவர் குமார், 52; பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த 5ம் தேதி காலை 11.00 மணியளவில் அண்ணா சாலை டெம்போ ஸ்டாண்டில் ஜோதி என்பவரிடம் பைனான்ஸ் தொகை வசூல் செய்தார்.அப்போது, ஜோதி மீண்டும் 5 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டார். ஏற்கனவே வாங்கியதில் மீதி தொகையை கட்டி முடித்தால், கடன் தருவதாக தெரிவித்தார். அதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் குமார், நேற்று முன்தினம் இரவு 8.40 மணியளவில், அண்ணா சாலையில் நின்றிருந்தார். கோவிந்தசாலை இளங்கோ, முதலியார்பேட்டை ஜேம்ஸ் தலைமையிலான கும்பல் அங்கு வந்து, 'ஜோதியிடம் எதற்கு தகராறு செய்தாய்' என கேட்டு, கருங்கற்களால் தலையில் தாக்கியது.இந்த தாக்குதலின்போது, குமார் அணிந்திருந்த செயின், குருமாத், வாட்ச் ஆகியவை மாயமானது.இது குறித்து குமார் அளித்த புகாரின்பேரில் இளங்கோ, ஜேம்ஸ் உள்ளிட்ட கும்பல் மீது போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X