இந்தியா

மூதாட்டியிடம் செயின் பறித்தவர் கைது

Added : ஆக 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மூதாட்டியிடம் செயின் பறித்துச் சென்ற வில்லியனுார் ஆசாமியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.வடமாநிலத்தைச் சேர்ந்த புரவி கவுல், 80; என்ற மூதாட்டி, புதுச்சேரி செஞ்சி சாலை அருகே உள்ள ஆசிரம விடுதியில் தங்கியுள்ளார்.கடந்த 1ம் தேதி, இரவு 7:30 மணிக்கு, உணவு உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு சைக்கிள் ரிக் ஷாவில் செட்டித் தெரு வழியாக குடியிருப்பிற்கு

புதுச்சேரி : மூதாட்டியிடம் செயின் பறித்துச் சென்ற வில்லியனுார் ஆசாமியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

வடமாநிலத்தைச் சேர்ந்த புரவி கவுல், 80; என்ற மூதாட்டி, புதுச்சேரி செஞ்சி சாலை அருகே உள்ள ஆசிரம விடுதியில் தங்கியுள்ளார்.கடந்த 1ம் தேதி, இரவு 7:30 மணிக்கு, உணவு உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு சைக்கிள் ரிக் ஷாவில் செட்டித் தெரு வழியாக குடியிருப்பிற்கு திரும்பினார்.மிஷின் வீதி சந்திப்பு அருகே சென்றபோது, ஸ்கூட்டரில் வந்த மர்ம நபர், கவுல் அணிந்திருந்த 2 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

இது தொடர்பாக பெரியக்கடை போலீசார் விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, வழிப்பறியில் ஈடுபட்டவர் பயன்படுத்திய ஸ்கூட்டர் பதிவெண்ணை கொண்டு விசாரணை நடத்தினர்.செயின் பறிப்பில் ஈடுபட்டது, வில்லியனுார் பத்மினி நகர், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்த ராஜசேகர் (எ) சிவப்பிரகாசம், 59; என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

பறித்து சென்ற செயினை ரூ.60 ஆயிரத்திற்கு அடகு வைத்து, அதில் மீதி வைத்திருந்த ரூ.35 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சிவப்பிரகாசம், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X