சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி இறப்பிற்கு காரணமான வாலிபர் கொலை வழக்கில் கைது

Added : ஆக 07, 2021
Share
Advertisement
பண்ருட்டி : பண்ருட்டி அருகே பாலியல் தொல்லை காரணமாக சிறுமி இறந்ததால் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சின்னபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்.விவசாயி; இவரது மகன் பாண்டியன்,19; இவர் 16 வயது சிறுமியை கடந்த ஏப்ரல் 20ம் தேதி திருமணம் செய்து கொள்ளுமாறு பாலியல் தொந்தரவு கொடுத்தார். புகாரின் பேரில் பாண்டியனை போக்சோ சட்டத்தில் பண்ருட்டி
 சிறுமி இறப்பிற்கு காரணமான வாலிபர் கொலை வழக்கில் கைது

பண்ருட்டி : பண்ருட்டி அருகே பாலியல் தொல்லை காரணமாக சிறுமி இறந்ததால் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சின்னபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்.விவசாயி; இவரது மகன் பாண்டியன்,19; இவர் 16 வயது சிறுமியை கடந்த ஏப்ரல் 20ம் தேதி திருமணம் செய்து கொள்ளுமாறு பாலியல் தொந்தரவு கொடுத்தார். புகாரின் பேரில் பாண்டியனை போக்சோ சட்டத்தில் பண்ருட்டி மகளிர் போலீசார் கைது செய்தனர்.

ஜாமினில் வெளியே வந்த பாண்டியன் மீண்டும் ஜூலை 26ம் தேதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். 'தன்னை திருமணம் செய்து கொள், இல்லையெனில் பூச்சிமருந்து சாப்பிட்டு இறந்து போ' என கூறி விஷ மருந்தை கொடுத்துள்ளார். மனமுடைந்த சிறுமி கடந்த 2 ம் தேதி விஷம் சாப்பிட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இது குறித்து சிறுமியின் தந்தை 4ம் தேதி புகார் கொடுத்தார். புதுப்பேட்டை போலீசார் கொலை முயற்சி மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து பாண்டியனை தேடி வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி பாண்டியனை புதுப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X