சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீ விபத்தில் முதியவர் பலி

Added : ஆக 07, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே தீ விபத்தில் முதியவர் கருகி இறந்தார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பெரியதச்சூர் காலனி நந்தனார் தெருவைச் சேர்ந்தவர் சூசை, 78: வயது முதிர்வு காரணமாக மகள் பாக்கியம் வீட்டில் வசித்து வந்தார்.நேற்று மாலை பாக்கியம் வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு கடை வீதிக்குச் சென்றிருந்தார். இரவு 8:30 மணியளவில் விளக்கு கீழே

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே தீ விபத்தில் முதியவர் கருகி இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பெரியதச்சூர் காலனி நந்தனார் தெருவைச் சேர்ந்தவர் சூசை, 78: வயது முதிர்வு காரணமாக மகள் பாக்கியம் வீட்டில் வசித்து வந்தார்.நேற்று மாலை பாக்கியம் வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு கடை வீதிக்குச் சென்றிருந்தார். இரவு 8:30 மணியளவில் விளக்கு கீழே விழுந்ததில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. திண்டிவனம் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

கடைவீதிக்குச் சென்ற பாக்கியம் வந்து, தனது தந்தை வீட்டிற்குள் சிக்கியிருப்பதை தெரிவித்தார். உள்ளே சென்று பார்த்தபோது, உடல் கருகிய நிலையில் சூசை இறந்து கிடந்தார்.பெரியதச்சூர் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X