பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : ஆக 07, 2021
Share
Advertisement
310 பேருக்கு தடுப்பூசிதிருத்தணி: திருத்தணி நகராட்சி அலுவலகத்தில், கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. முகாமை, நகராட்சி பொறியாளர் சண்முகம் துவக்கி வைத்தார். இதில், பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் சந்திரன் தலைமையில், மருத்துவ செவிலியர்கள் பங்கேற்று, மொத்தம், 160 பேருக்கு தடுப்பூசி போட்டனர்.கொரோனா தொற்று பரவல் தடுப்பது குறித்து மருத்துவ அலுவலர் சந்திரன் மற்றும்

310 பேருக்கு தடுப்பூசி

திருத்தணி: திருத்தணி நகராட்சி அலுவலகத்தில், கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. முகாமை, நகராட்சி பொறியாளர் சண்முகம் துவக்கி வைத்தார். இதில், பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் சந்திரன் தலைமையில், மருத்துவ செவிலியர்கள் பங்கேற்று, மொத்தம், 160 பேருக்கு தடுப்பூசி போட்டனர்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பது குறித்து மருத்துவ அலுவலர் சந்திரன் மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் விளக்கினர்.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறை சார்பில், கொரோனா தடுப்பூசி போடும் முகாம் திருவள்ளூர் சாலையில் நடந்தது.

லட்சிவாக்கம் ஆரம்ப சுகாதார மைய மருத்துவ குழுவினர், பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டனர். ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 150க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

சங்க பணம் கையாடல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட, மருந்து வணிகர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸிடம் கொடுத்த மனு:

மருந்து வணிகர் சங்கம், 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 20 ஆண்டுகளாக, உறுப்பினர் செலுத்திய தொகை, 2 கோடி ரூபாயை, முன்னாள் நிர்வாகிகள் கையாடல் செய்துள்ளனர்.எனவே, இந்த சங்கத்தைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகளை விசாரித்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்து, சங்க பணத்தையும் மீட்டு தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வணிகர்களுக்கு சான்று வழங்கல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில், வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு சான்றிதழ் வழங்கும் விழா, உத்திரமேரூரில் நேற்று நடந்தது.

இதன் சங்கத் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அமுதா, விமலவிநாயகம் ஆகியோர் பங்கேற்று உணவு கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பின் அவசியம் குறித்து விளக்கம் அளித்தனர். 100க்கும் மேற்பட்ட வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு சான்றிதழ் வழங்கினர்.

ஆற்பாக்கம் காப்பகத்தில் ஆய்வு

காஞ்சிபுரம்: கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகள் இல்லத்திலும், மாவட்ட குழந்தைகள் நல குழுமம் சார்பில், கொரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, மாவட்ட குழந்தைகள் நல குழும உறுப்பினர் சக்திவேல், ஆற்பாக்கத்தில் உள்ள நரிக்குறவர்கள், இருளர்கள், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் நேற்று ஆய்வு செய்தார்.காப்பக குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வும், மன அழுத்தம் குறைக்கும் வகையில் ஆலோசனையும் வழங்கினார்

கொரோனா விழிப்புணர்வு

வெங்கத்துார்: கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட பட்டறை பகுதியில்,ஊராட்சி நிர்வாகத்தினருடன் இணைந்து, சுகாதாரபணியாளர்கள், வீடு, வீடாக சென்று, பொதுமக்களிடம் காய்ச்சல், சளி பாதிப்பு உள்ளதா என,கேட்டறிந்து வருகின்றனர்.

உடல்நலம் பாதிக்கப்பட்டால் அருகில் உள்ளஅரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என,அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், ''கொரோனாதடுப்பூசி போட்டு வீட்டீர்களா... தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். முக கவசம் அணிய வேண்டும், சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும்'' என, வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X