சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காலில் விழ வைத்தவர் மீது கடும் நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

Added : ஆக 07, 2021
Share
Advertisement
அன்னூர்:தலித் ஊழியரை காலில் விழ வைத்தவர் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அன்னூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அன்னூர் அருகே ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், கோபால்சாமி என்பவர் பட்டா மாறுதல் கோரி சென்றபோது, வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த பிரச்னையில், ஒட்டர்பாளையம் கிராம உதவியாளர் முத்துச்சாமி, கோபால்சாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கோரும் வீடியோ,
 காலில் விழ வைத்தவர் மீது கடும் நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

அன்னூர்:தலித் ஊழியரை காலில் விழ வைத்தவர் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அன்னூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அன்னூர் அருகே ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், கோபால்சாமி என்பவர் பட்டா மாறுதல் கோரி சென்றபோது, வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த பிரச்னையில், ஒட்டர்பாளையம் கிராம உதவியாளர் முத்துச்சாமி, கோபால்சாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கோரும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.இதையடுத்து, தலித் ஊழியரை, காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தவரை, கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, நல்லி செட்டிபாளையம் இளைஞர் மன்றம் ஆகியவற்றின் சார்பில், நேற்று அன்னூர் கைகாட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில், வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கனகராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் சிவஞானம், மாவட்டச் செயலாளர் ஆறுச்சாமி, இளைஞர் மன்ற தலைவர் ராமன் உட்பட பலர் பங்கேற்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X