பொது செய்தி

தமிழ்நாடு

குலுங்காமல் வி.ஐ.பி.,போயாச்சு; வேகத்தடை அமைக்க நேரமாச்சு!

Added : ஆக 07, 2021
Share
Advertisement
அன்னூர்:வி.ஐ.பி., வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகளை, மீண்டும் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அன்னூர் அவிநாசி ரோட்டில், அரசு மேல்நிலைப்பள்ளி முன்புறம், விபத்தில் மாணவர் ஒருவர் இறந்தார். இதையடுத்து, அரசு மேல்நிலைப்பள்ளி முன்புறமும், சார் பதிவாளர் அலுவலக முன்புறமும், வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 6ம் தேதி
 குலுங்காமல் வி.ஐ.பி.,போயாச்சு; வேகத்தடை அமைக்க நேரமாச்சு!

அன்னூர்:வி.ஐ.பி., வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகளை, மீண்டும் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அன்னூர் அவிநாசி ரோட்டில், அரசு மேல்நிலைப்பள்ளி முன்புறம், விபத்தில் மாணவர் ஒருவர் இறந்தார். இதையடுத்து, அரசு மேல்நிலைப்பள்ளி முன்புறமும், சார் பதிவாளர் அலுவலக முன்புறமும், வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 6ம் தேதி ஊட்டியில் இருந்து அன்னூர் வழியாக செல்வதற்காக, கடந்த 5ம் தேதி அவிநாசி ரோட்டில், அரசு மேல்நிலைப்பள்ளி முன்புறமும், இதையடுத்து, இருந்த வேகத்தடைகளும் அகற்றப்பட்டன. அவை மீண்டும் அமைக்கப்படவில்லை.அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இங்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு, வளைவுகள் இல்லாமல் நேராக அகலமாக பாதை உள்ளதால், வாகனங்கள் மிக வேகமாக வருகின்றன. இங்கு அதிக மக்கள் வந்து செல்லும், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. ஆயிரத்து 300 மாணவர்கள் படிக்கின்ற, அரசு பள்ளி உள்ளது. எனவே, விபத்துக்கள் அதிகமாக நடக்க வாய்ப்பு உள்ளதால், அகற்றப்பட்ட வேகத்தடைகளை, மீண்டும் உடனே அமைக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X