சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பலி

Added : ஆக 07, 2021
Share
Advertisement
சோழவரம் : சோழவரம் அருகே, கொசஸ்தலை ஆற்றில் குளித்த மூன்று சிறுவர்கள், நீரில் மூழ்கி இறந்தனர்.சோழவரம் அடுத்த காரனோடையைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா, 15,அர்ஜுன் 13, சென்னைபெரம்பூரைச் சேர்ந்தசத்யா நாராயணன் 14, மூவரும், நேற்று முன்தினம் மாலை, கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்றனர்.இரவு நெடுநேரமாகியும் சிறுவர்கள் மூவரும் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோழவரம்

சோழவரம் : சோழவரம் அருகே, கொசஸ்தலை ஆற்றில் குளித்த மூன்று சிறுவர்கள், நீரில் மூழ்கி இறந்தனர்.

சோழவரம் அடுத்த காரனோடையைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா, 15,அர்ஜுன் 13, சென்னைபெரம்பூரைச் சேர்ந்தசத்யா நாராயணன் 14, மூவரும், நேற்று முன்தினம் மாலை, கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்றனர்.இரவு நெடுநேரமாகியும் சிறுவர்கள் மூவரும் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோழவரம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் காரனோடை பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றுப்பகுதிக்கு சென்று சிறுவர்களை தேடினர். அங்கு சிறுவர்களது உடைகள் மட்டும் இருப்பதை கண்டு, செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி சிறுவர்களை தேடினர். நள்ளிரவு, 1:00 மணிக்கு, சிறுவர்கள் மூவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.குளிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்தது தொடர்பாக, சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X