சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பல இடங்களில் கைவரிசை காட்டிய இருவர் கைது; நகைகள் பறிமுதல்

Added : ஆக 07, 2021
Share
Advertisement
சூலூர்:சூலூர் சுற்றுவட்டாரத்தில், பல இடங்களில் நகை திருடிய இருவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சூலூர், காடாம்பாடி, காங் கயம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், தொடர்ந்து வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் நடந்து வந்தன. உயரதிகாரிகள் உத்தரவின் பேரில், எஸ்.ஐ., பாண்டியராஜன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது.கடந்த மே மாதம், காங்கயம்பாளையம்- காசி கவுண்டன்புதூர்
 பல இடங்களில் கைவரிசை காட்டிய இருவர் கைது; நகைகள் பறிமுதல்

சூலூர்:சூலூர் சுற்றுவட்டாரத்தில், பல இடங்களில் நகை திருடிய இருவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சூலூர், காடாம்பாடி, காங் கயம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், தொடர்ந்து வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் நடந்து வந்தன. உயரதிகாரிகள் உத்தரவின் பேரில், எஸ்.ஐ., பாண்டியராஜன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது.கடந்த மே மாதம், காங்கயம்பாளையம்- காசி கவுண்டன்புதூர் ரோட்டில் உள்ள, டாஸ்மாக் மதுக்கடை சுவற்றை துளையிட்டு, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடப்பட்டன.இதில், இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய நபராக செயல்பட்ட முருகன் என்பவரை, தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், சூலூர் அடுத்த அப்பநாயக்கன்பட்டியில், வாகன சோதனை நடத்தியபோது, சந்தேகத்துக்கு இடமான வகையில், பைக்கில் வந்த இருவரை பிடித்தனர்.விசாரணையில், அவர்கள் இருவரும் தூத்துக்குடியை சேர்ந்த முருகன் என்கிற ரிவால்வர் முருகன்,58 மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த பழனிவேல்,46 என்பது தெரிந்தது.அவர்கள், சூலூர் பகுதியில் நடந்த நகை திருட்டு, டாஸ்மாக் திருட்டு உள்ளிட்ட வழக்குகளில், முக்கிய குற்றவாளிகள் என தெரிந்தது.அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்த போலீசார், 16 சவரன் நகை மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X