சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் தாலி பறித்தவர் கைது

Added : ஆக 07, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி மலர், 45. இவர்களுக்கு சொந்தமான மாட்டை, அப்பகுதி ஏரிக்கு ஓட்டி சென்று மேய்ப்பது வழக்கம்.அதேபோல் நேற்று முன்தினம், ஏரியில் மலர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த ஒருவர், 'தாகமாக இருக்கிறது தண்ணீர் கொடுங்கள்' என கேட்டுஉள்ளார்.தண்ணீர் கொடுக்கும்போது, மலரின் வாயைமூடி தாக்கியதால் அவர்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி மலர், 45. இவர்களுக்கு சொந்தமான மாட்டை, அப்பகுதி ஏரிக்கு ஓட்டி சென்று மேய்ப்பது வழக்கம்.அதேபோல் நேற்று முன்தினம், ஏரியில் மலர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த ஒருவர், 'தாகமாக இருக்கிறது தண்ணீர் கொடுங்கள்' என கேட்டுஉள்ளார்.

தண்ணீர் கொடுக்கும்போது, மலரின் வாயைமூடி தாக்கியதால் அவர் மயக்கம் அடைந்தார். அவரது தாலி செயினை பறித்து அந்நபர் தப்பினார்.மயக்கம் தெளித்த பின், மலர் கூறிய அடையாளத்தை வைத்து, போலீசார் விசாரித்தனர். இதில், முசரவாக்கம் சீராளன், 35, என்பது தெரிந்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X