சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி மாணவர்களிடம் பணம், நகை பறித்தவர் கைது

Added : ஆக 07, 2021
Share
Advertisement
கோவை:கல்லுாரி மாணவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, பணம், நகைகளை பறித்து சென்ற வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.நாமக்கல் பரமத்தி ரோட்டை சேர்ந்த ராஜசேகர், மகன், தேவேஷ்வர், 20. கோவை பீளமேட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். சிங்காநல்லுார் உப்பிலிபாளையத்தில் அறை எடுத்து தங்கியுள்ளார்.இந்நிலையில் கடந்த மார்ச் மாதம்,

கோவை:கல்லுாரி மாணவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, பணம், நகைகளை பறித்து சென்ற வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.நாமக்கல் பரமத்தி ரோட்டை சேர்ந்த ராஜசேகர், மகன், தேவேஷ்வர், 20. கோவை பீளமேட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். சிங்காநல்லுார் உப்பிலிபாளையத்தில் அறை எடுத்து தங்கியுள்ளார்.இந்நிலையில் கடந்த மார்ச் மாதம், இவர் தனது நண்பர்களுடன் இருந்த போது, ஆறு வாலிபர்கள் கத்தியுடன் அறைக்குள் நுழைந்தனர். தேவேஷ்வர் மற்றும் அவரது நண்பர்களை மிரட்டி, இரண்டு பவுன் செயின் ரூ.21 ஆயிரம், ஏ.டி.எம்., கார்டு, மொபைல்போன், லேப்டாப் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.அதிர்ச்சியடைந்த தேவேஷ்வர், சிங்காநல்லுார் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். வழக்கு பதிந்த போலீசார், ஆறு பேரை தேடி வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய, விஷாக், 21, கண்ணன், 25, கேசவ்குமார், 22, அருண்குமார், 24, நிதிஷ், 21 ஆகிய ஐந்து பேரை, கடந்த மார்ச் மாதம் போலீசார் கைது செய்தனர். தேடப்பட்டு வந்த, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வினீத்குமார், 23 என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X