பொது செய்தி

தமிழ்நாடு

வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல்: கட்சியினர் கலந்தாய்வு கூட்டம்

Added : ஆக 07, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால், அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.மாவட்டத்தின் ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் வார்டு வாரியாக ஓட்டுச்சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து ஓட்டுச்சாவடிகள் குறித்த கருத்தை, அரசியல் கட்சியினர் தெரிவிக்கும் வகையில், கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நேற்று கலந்தாய்வு கூட்டம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால், அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

மாவட்டத்தின் ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் வார்டு வாரியாக ஓட்டுச்சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து ஓட்டுச்சாவடிகள் குறித்த கருத்தை, அரசியல் கட்சியினர் தெரிவிக்கும் வகையில், கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில் அரசியல் கட்சியினர் கூறியதாவது:அந்தந்த பகுதி வாக்காளர்களுக்கு அவர்கள் இடத்திலேயே ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும். ஒரே தெருவில் உள்ளவர்கள், வேறு வேறு இடத்திற்கு சென்று ஓட்டுபோடும் நிலை உள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியாக மாறுவதாக தகவல் வெளியாகி உள்ளதால், உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர்கள் எண்ணிக்கை குறையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.அதற்கு கலெக்டர் ஆர்த்தி, ''மாநகராட்சியாக மாற்றுவதுஅரசின் முடிவு. தற்போது ஓட்டுச்சாவடிகள் குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும். ''திட்டமிட்டபடி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும். இது குறித்து கருத்தை எழுத்து பூர்வமாகவும் தெரிவிக்கலாம்,'' என்றார்.

அவரவர் பகுதிகளில் ஓட்டுச்சாவடி குறித்த கருத்தை, வரும் 11ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த தேர்தல் சம்பந்தமான கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராகுல்நாத் தலைமை ஏற்றார். தி.மு.க., - அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X