ஒருங்கிணைந்து செயல்பட்டு குழந்தை தொழிலாளரை மீட்கணும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஒருங்கிணைந்து செயல்பட்டு குழந்தை தொழிலாளரை மீட்கணும்'

Added : ஆக 08, 2021
Share
கோவை:''குழந்தை தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில், அரசு துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,'' என, கோவை கலெக்டர் சமீரன் கேட்டுக் கொண்டார்.தேசிய குழந்தை தொழிலாளர் திட்டக்குழு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், கலெக்டர் சமீரன் பேசியதாவது:குழந்தை தொழிலாளர்களை மீட்கும் பணியில் தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை,

கோவை:''குழந்தை தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில், அரசு துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,'' என, கோவை கலெக்டர் சமீரன் கேட்டுக் கொண்டார்.தேசிய குழந்தை தொழிலாளர் திட்டக்குழு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், கலெக்டர் சமீரன் பேசியதாவது:குழந்தை தொழிலாளர்களை மீட்கும் பணியில் தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை, காவல் துறை, வருவாய்த்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மற்றும் சைல்டு லைன் ஒருங்கிணைந்து, முனைப்புடன் செயல்பட வேண்டும்.குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, பட்டம் முடித்தவர்களுக்கு, மாவட்ட தொழில் மையம் மற்றும் எம்.எஸ்.எம்.இ., மூலம் பயிற்சி அளித்து, சுய தொழில் துவங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.குழந்தை தொழிலாளர்கள் பணியில் இருப்பது தெரிந்தால், 1098 அல்லது, 0422 - 2305 445 ஆகிய எண்களுக்கு, காலை, 9:30 முதல் இரவு, 7:00 மணிக்குள் தெரிவிக்கலாம். www.pencil.gov.in என்ற இணையதள முகவரிக்கும், புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X