பொது செய்தி

தமிழ்நாடு

'அரசு சித்தா சிகிச்சை மையத்தில் இதுவரை உயிரிழப்பு இல்லை!'

Added : ஆக 08, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து, காந்திபுரம், சீனிவாச கல்யாண மண்டபத்தில் செயல்பட்டு வந்த, சித்தா கொரோனா சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்பட்டது.மாறாக, கொடிசியா அரங்கில், 100 படுக்கைகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள, சித்தா சிகிச்சை மையத்தில் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், அறிகுறியற்ற கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலரும், சித்த மருத்துவ முறையில்

கோவை:கோவையில் கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து, காந்திபுரம், சீனிவாச கல்யாண மண்டபத்தில் செயல்பட்டு வந்த, சித்தா கொரோனா சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்பட்டது.மாறாக, கொடிசியா அரங்கில், 100 படுக்கைகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள, சித்தா சிகிச்சை மையத்தில் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், அறிகுறியற்ற கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலரும், சித்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற, ஆர்வம் காண்பிக்கின்றனர்.இதுகுறித்து, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம் கூறியதாவது:கோவையில் இதுவரை, 940க்கு பேர் சித்தா சிகிச்சை பெற்றுள்ளனர். அதில், 848 பேர் பூரண குணமடைந்துள்ளனர், தற்சமயம் ஆண்கள் 60, பெண்கள் 30 மற்றும் ஒரு குழந்தை உட்பட மொத்தம், 91 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.இதுவரை உயிரிழப்புகள் ஏதும் இல்லை. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவும், முறையாக கண்காணிக்கவும், இரண்டு ஷிப்டுகளில் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.இம்மையத்தில், அமுக்ரா மாத்திரை, தாளிசாதி வடகம், ஆடாதொடை மணப்பாகு, கபசுரகுடிநீர், நிலவேம்பு குடிநீர், போன்ற உள் மருந்துகளுடன், மூலிகை தேநீர், மூக்கு பாதையை சரி செய்ய நீராவி சிகிச்சை நுரையீரல் நலன் காக்கும் யோகா மற்றும் மூச்சு பயிற்சி, வாசனை திறனை மீட்டெடுக்க ஓம பொட்டலம் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோருக்கு, உடல் வன்மையை மேம்படுத்த, அமுக்ரா சூரண மாத்திரை, நெல்லி இளகம் அடங்கிய ஆரோக்கிய பெட்டகம் கொடுக்கப்படுகிறது.குணமடைந்தவர்களிடம் கருத்துகள் பெற்று அதன் மூலம், மக்கள் மத்தியில் சித்த மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X