சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி ஆடம்பரம்; கணவர் தற்கொலை

Added : ஆக 08, 2021
Share
Advertisement
திருவொற்றியூர் : மனைவியின் ஆடம்பர செலவால் மனமுடைந்த கணவர், துாக்கிட்டு தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியது.திருவொற்றியூர், கல்யாணி செட்டி தெருவைச் சேர்ந்த ஆனந்த், 35; மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி ரம்யா. தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.மனைவி, கணவருக்கு தெரியாமல், அவரது வங்கி கணக்கில் இருந்து, 4 லட்சம் ரூபாய் எடுத்து செலவழித்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில்,
 மனைவி ஆடம்பரம்; கணவர் தற்கொலை

திருவொற்றியூர் : மனைவியின் ஆடம்பர செலவால் மனமுடைந்த கணவர், துாக்கிட்டு தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியது.

திருவொற்றியூர், கல்யாணி செட்டி தெருவைச் சேர்ந்த ஆனந்த், 35; மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி ரம்யா. தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.மனைவி, கணவருக்கு தெரியாமல், அவரது வங்கி கணக்கில் இருந்து, 4 லட்சம் ரூபாய் எடுத்து செலவழித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆனந்த் வங்கி கணக்கை திடீரென ஆய்வு செய்தபோது, பணம் குறைந்திருப்பது தெரியவந்தது. மனைவியிடம் கேட்டதற்கு, வீட்டு செலவுக்காக எடுத்ததாக கூறினார்.இதனால், மனமுடைந்த ஆனந்த், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X