பொது செய்தி

தமிழ்நாடு

மாடல் ரோட்டில் 'முட்டிக்கோ மோதிக்கோ!' ஆக்கிரமிப்புகளால் தினமும் விபத்து

Added : ஆக 08, 2021
Share
Advertisement
கோவை;ரூ.25.25 கோடி செலவழித்து, ஆர்.எஸ்.புரத்தில் உருவாக்கிய மாதிரி சாலையில், மக்கள் நடந்து செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு உருவாகி விட்டது. அதனால், தினமும் விபத்து நடப்பது, சர்வ சாதாரணமாகி விட்டது.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை, ஆர்.எஸ்.புரம், டி.பி., ரோட்டில், சுக்ரவாரப்பேட்டை சந்திப்பு முதல் கவுலி பிரவுன் ரோடு சந்திப்பு வரை, 1.8 கி.மீ., துாரத்துக்கு, ரூ.25.25 கோடியில் 'மாடல்
 மாடல் ரோட்டில் 'முட்டிக்கோ மோதிக்கோ!' ஆக்கிரமிப்புகளால் தினமும் விபத்து

கோவை;ரூ.25.25 கோடி செலவழித்து, ஆர்.எஸ்.புரத்தில் உருவாக்கிய மாதிரி சாலையில், மக்கள் நடந்து செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு உருவாகி விட்டது. அதனால், தினமும் விபத்து நடப்பது, சர்வ சாதாரணமாகி விட்டது.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை, ஆர்.எஸ்.புரம், டி.பி., ரோட்டில், சுக்ரவாரப்பேட்டை சந்திப்பு முதல் கவுலி பிரவுன் ரோடு சந்திப்பு வரை, 1.8 கி.மீ., துாரத்துக்கு, ரூ.25.25 கோடியில் 'மாடல் ரோடு' அமைக்கப்பட்டுள்ளது.பணிகள் இன்னும் முழுமையாக முடியாத போதிலும், ஒதுக்கிய நிதியை, ஒப்பந்த நிறுவனத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் அள்ளிக் கொடுத்து விட்டது.இப்போது, அறிவித்த திட்டம் முடிந்து விட்டது என்ற ரீதியில், டி.பி., ரோட்டில் என்ன நடக்கிறது என, அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.ரோடு, மேடு பள்ளமாக இருக்கிறது. பாதசாரிகள் செல்லும் பாதையில், இரு சக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். ரோடு சந்திப்புகளில் வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றன. போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.ஐ பவுண்டேசன் அருகே, பாஷ்யகாரலு வீதி சந்திப்பில், நடைபாதையை ஒட்டி, ஆவின் பாலகம் இருக்கிறது. அதன் முன், பாதையை ஆக்கிரமித்து பழக்கடை நடத்தப்படுகிறது.ரோட்டின் மற்றொரு பகுதியில், ஆட்டோ ஸ்டாண்ட் செயல்படுகிறது. ரோட்டின் இருபுறமும், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.நடைபாதையில் வருவோர், இப்பகுதியில் ரோட்டில் இறங்கிச் செல்ல வேண்டியுள்ளது. டி.பி., ரோட்டில் வாகனங்களில் வருவோர், பாஷ்யகாரலு வீதிக்கு திரும்பும்போது, எதிர் திசையில் வரும் வாகனங்களில் மோதிக்கொள்கின்றனர்.தினமும், சிறு சிறு விபத்துகள் நடக்கின்றன. ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டிய, மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X