இலக்கை விரட்டுமா இந்தியா; விறுவிறு கட்டத்தில் முதல் டெஸ்ட்| Dinamalar

இலக்கை 'விரட்டுமா' இந்தியா; 'விறுவிறு' கட்டத்தில் முதல் டெஸ்ட்

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 08, 2021
Share
நாட்டிங்காம்-இந்தியா, இங்கிலாந்து மோதும்முதல் டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 157 ரன் தேவைப்படுகின்றன.இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 183, இந்தியா 278 ரன்கள் எடுத்தன. 93 ரன் பின்தங்கிய நிலையில் இரண்டாவது

நாட்டிங்காம்-இந்தியா, இங்கிலாந்து மோதும்முதல் டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 157 ரன் தேவைப்படுகின்றன.



latest tamil news



இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 183, இந்தியா 278 ரன்கள் எடுத்தன. 93 ரன் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 25 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட மூன்றாவது நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பர்ன்ஸ் (11), சிப்லே (9) அவுட்டாகாமல் இருந்தனர்.


சிராஜ் நம்பிக்கை

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. பும்ரா பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் பர்ன்ஸ். அடுத்த சில நிமிடத்தில் முகமது சிராஜ், பர்ன்சை (18) அவுட்டாக்கி அனுப்பி வைத்தார். சிப்லேயுடன் இணைந்த கிராலே, தான் எதிர்கொண்ட முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவக்கினார். இம்முறை கிராலேவை (6), பும்ரா அவுட்டாக்கினார்.


ஜோ ரூட் 'வேகம்'

பின் சிப்லேயுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் ஜோ ரூட். சிராஜ் பந்துகளில் அவ்வப்போது பவுண்டரி விளாசிய ஜோ ரூட், பும்ரா பந்தையும் விட்டுவைக்கவில்லை. அடுத்து வந்த ஷமி ஓவரில் அடுத்தடுத்து ரன்கள் எடுத்து, 'வேகம்' காட்டினார். முதல் இன்னிங்சை போல, மீண்டும் ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு தொல்லை தந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்த நிலையில், பும்ரா பந்தில் சிப்லே (28) அவுட்டானார்.பேர்ஸ்டோவ் 30 ரன் எடுத்த போது, சிராஜ் பந்தில் சிக்கினார். லாரன்ஸ் (25), பட்லரை (17) ஷர்துல் தாகூர் திருப்பி அனுப்பினார். சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ஜோ ரூட், டெஸ்ட் அரங்கில் 21வது சதம் அடித்தார்.


பும்ரா 'ஐந்து'

இதன் பின் திடீரென மிரட்டிய பும்ரா, முதலில் ஜோ ரூட்டை (109) அவுட்டாக்கினார். பிராட்டை 'டக்' அவுட்டாக்கிய இவர், அடுத்து சாம் கர்ரானையும் (32) வெளியேற்றினார். கடைசியில் ராபின்சன் (15) அவுட்டாக,இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில்303 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.இந்தியா சார்பில் பும்ரா5,சிராஜ், ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


latest tamil news



ராகுல் 'அவுட்'

இரண்டாவது இன்னிங்சில் 209 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது இந்தியா. ராகுல் 26 ரன் எடுத்தார். நான்காவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 52 ரன் எடுத்து, 157 ரன் பின்தங்கி இருந்தது. கைவசம் 9 விக்கெட்டுகள் மீதமுள்ளன. கடைசி நாளான இன்று நமது பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் முதல் டெஸ்டில் வெற்றி பெறலாம்.


ஜிலேபி கொண்டாட்டம்

இந்தியா-இங்கிலாந்து தொடரை வர்ணனை செய்கிறார் முன்னாள் கேப்டன் கவாஸ்கர். ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதை 'டிவி' யில் பார்த்து மகிழ்ந்தார். அப்போது பாட்டுப்பாடி, நடனம் ஆடி மகிழ்ந்தார். தவிர, 'இந்தியாவுக்கு பொன்னான நாள்,' என கூறிய இவர், தென் ஆப்ரிக்காவின் ஷான் போலக் உள்ளிட்டவர்களுக்கு ஜிலேபி வழங்கி கொண்டாடினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X