தமிழ்நாடு

நகர் முழுவதும் வழிகாட்டி பலகை... போகாத ஊருக்கு வழி! குழப்பியடிக்குது நெடுஞ்சாலைத்துறை!

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோவை:கோவையில் உள்ள பிரபலமான இடங்கள் குறித்து, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஆங்காங்கே புதிதாக வழிகாட்டும் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவை, மக்களை குழப்பும் வகையில் அமைந்துள்ளன.கோவையில் உள்ள முக்கியமான இடங்களுக்குச் செல்ல, வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டும் வகையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், புகைப்படங்களுடன் பெரிய அளவில் வழிகாட்டி பலகைகள், ரோடு சந்திப்பு
நகர் முழுவதும் வழிகாட்டி பலகை...  போகாத ஊருக்கு வழி! குழப்பியடிக்குது நெடுஞ்சாலைத்துறை!

கோவை:கோவையில் உள்ள பிரபலமான இடங்கள் குறித்து, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஆங்காங்கே புதிதாக வழிகாட்டும் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவை, மக்களை குழப்பும் வகையில் அமைந்துள்ளன.

கோவையில் உள்ள முக்கியமான இடங்களுக்குச் செல்ல, வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டும் வகையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், புகைப்படங்களுடன் பெரிய அளவில் வழிகாட்டி பலகைகள், ரோடு சந்திப்பு பகுதிகளில், புதிதாக வைக்கப்பட்டுள்ளன.

கலெக்டர் அலுவலகம் எதிரே, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் படத்தை அச்சிட்டு, போர்டு வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், பழைய போஸ்ட் ஆபீஸ் வீதி வழியாகச் செல்ல வேண்டுமா; உப்பிலிபாளையம் வழியாக செல்ல வேண்டுமா என்கிற, அம்புக்குறி இல்லாமல் இருக்கிறது.வலதுபுறம் திரும்பினால், 'ரவுண்டானா' பகுதியில், எந்த வழியாகச் செல்ல வேண்டும் என்கிற குழப்பம், வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும்.
பழைய போஸ்ட் ஆபீஸ் வழியாக செல்ல வேண்டுமெனில், அதற்கான குறியீடு காட்டியிருக்க வேண்டும்.இதேபோல், தொலைத்தொடர்பு துறை அலுவலக பெயர் பலகையை மறைத்து, நகர் மண்டபம் (டவுன்ஹால்) என குறிப்பிட்டு, மணிக்கூண்டு படம் அச்சிட்டு, போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதிலும், எந்த வழியாகச் செல்ல வேண்டும் என்கிற அம்புக்குறி இல்லை.லங்கா கார்னர் சந்திப்பு பகுதியில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் என பலகை வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷன் வழியாக வருவோர்,
இடது புறம் திரும்பி, திருச்சி ரோட்டில் நேராக பயணித்தால், கோவிலுக்குச் செல்ல முடியாது.அரசு மருத்துவமனை எதிரே வலதுபுறம் திரும்பி, லங்கா கார்னர் கீழ்பாலத்தை கடந்து, டவுன்ஹால் வழியாக என்.எச்., ரோடு வந்து, பிரகாசம் சிக்னல் கடந்து, செல்வபுரம் சாலை வழியாகவே, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்குச் செல்ல முடியும்.லங்கா கார்னர் சந்திப்பில், அம்புக்குறியிடாமல் வைத்துள்ள வழிகாட்டி பலகையால், வாகன ஓட்டிகளுக்கு குழப்பமே மிஞ்சுகிறது; சரியான வழியை காட்டாமல், நகரை சுற்ற விடும் செயலை, மாநில நெடுஞ்சாலைத்துறை செய்துள்ளது.ஐகோர்ட் உத்தரவை மீறி, ரோடு சந்திப்பு பகுதியில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், புதிதாக வைத்துள்ள போர்டு அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
08-ஆக-202111:12:05 IST Report Abuse
அசோக்ராஜ் இதெல்லாம் மக்கள் உபயோகத்துக்காக இல்லை. செலவுக் கணக்கு எழுதி ஏப்பம் விடுவதற்கான திட்டங்கள்.
Rate this:
Cancel
Ganesh - Coimbatore ,இந்தியா
08-ஆக-202107:02:15 IST Report Abuse
Ganesh இந்த பெயர் பலகை அனைத்தும் அ தி மு க அரசால் நிறுவபட்டது மேலும் தமிழகம் முழுவதும் இப்படி பெயர் பலகை உள்ளது இது மிக பெரிய ஊழல் இதை அரசு கவனிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X