13 மின்சார ரயில்கள் பாதி வழியில் ரத்து| Dinamalar

தமிழ்நாடு

13 மின்சார ரயில்கள் பாதி வழியில் ரத்து

Added : ஆக 08, 2021
Share
சென்னை : வண்டலுார் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி நடப்பதால், 13 மின்சார ரயில்கள், பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு காலை 9:40 மணி, 11:00 மணி, 11:30 மணி, நண்பகல் 12:20 மணி மற்றும் மதியம் 1:00 மணிக்கும், கும்மிடிப்பூண்டிக்கு காலை 10:30 மணிக்கும் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள், செங்கல்பட்டு - தாம்பரம் இடையே நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன கடற்கரை

சென்னை : வண்டலுார் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி நடப்பதால், 13 மின்சார ரயில்கள், பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு காலை 9:40 மணி, 11:00 மணி, 11:30 மணி, நண்பகல் 12:20 மணி மற்றும் மதியம் 1:00 மணிக்கும், கும்மிடிப்பூண்டிக்கு காலை 10:30 மணிக்கும் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள், செங்கல்பட்டு - தாம்பரம் இடையே நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன

 கடற்கரை நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 9:02 மணி, 9:32 மணி, 10:10 மணி, 10:56மணி, 11:50 மணி மற்றும் நண்பகல் 12:15 மணிக்கு இயக்கப்படும் புறநகர் ரயில்கள், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நாளைரத்து செய்யப்பட்டுள்ளன

 கும்மிடிப்பூண்டியில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 7:48 மணிக்கு இயக்கப்படும் ரயில், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது

காஞ்சிபுரத்தில் இருந்து கடற்கரை நிலையத்துக்கு காலை 9:15 மணிக்கும், செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நிலையத்துக்கு, மதியம் 1:50 மணிக்கும் இயக்க வேண்டிய ரயில்கள், நாளை முழுதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், காஞ்சிபுரத்தில் இருந்து கடற்கரை நிலையத்துக்கு, நாளை பகல் 12:00 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது

திருமால்பூரில் இருந்து கடற்கரை நிலையத்துக்கு, நாளை காலை 10:40 மணிக்கு இயக்க வேண்டிய மின்சார ரயில் நேரம் மாற்றப்பட்டு, காலை 12:00 மணிக்கு இயக்கப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X