சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் குளித்த சிறுவர்கள் மூவர் பலி

Added : ஆக 08, 2021
Share
Advertisement
சோழவரம் : சோழவரம் அருகே, ஆற்றில் குளித்த சிறுவர்கள் மூன்று பேர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.சோழவரம் அடுத்த காரனோடையைச் சேர்ந்தவர்கள் ரஹ்மத்துல்லா, 15, அர்ஜுன், 13. சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் சத்யநாராயணன், 14. மூவரும் நேற்று முன்தினம்மாலை, கொசஸ் தலை ஆற்றில் குளிக்க செல்வதாக கூறி சென்றனர்.இரவு நெடுநேரமாகியும் மூவரும் வீடு திரும்பாத நிலையில்,பெற்றோர் மற்றும்

சோழவரம் : சோழவரம் அருகே, ஆற்றில் குளித்த சிறுவர்கள் மூன்று பேர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சோழவரம் அடுத்த காரனோடையைச் சேர்ந்தவர்கள் ரஹ்மத்துல்லா, 15, அர்ஜுன், 13. சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் சத்யநாராயணன், 14. மூவரும் நேற்று முன்தினம்மாலை, கொசஸ் தலை ஆற்றில் குளிக்க செல்வதாக கூறி சென்றனர்.இரவு நெடுநேரமாகியும் மூவரும் வீடு திரும்பாத நிலையில்,பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோழவரம்காவல் நிலையத்தில்தகவல் தெரிவித்தனர்.போலீசார், காரனோடை பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் சென்று சிறுவர்களை தேடினர்.

அங்கு சிறுவர்களின் உடைகள் மட்டும் இருப்பதை கண்டு, செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி சிறுவர்களை தேடினர். நள்ளிரவு 1:00 மணிக்கு, சிறுவர்கள் மூவரும் சடலமாக மீட்கப்பட்டனர். குளிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்தது தொடர்பாக, சோழவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X