சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி கடத்திய 5 பேர் சிக்கினர்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
எம்.கே.பி.நகர் : எம்.கே.பி.நகரில், 25 ஆயிரம் கிலோ நெல் மூட்டைகளுடன் லாரியை கடத்தியோரை போலீசார் கைது செய்தனர்.கொடுங்கையூர், கே.கே.டி.நகர், எட்டாவது பிளாக், முதல் தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 50; லாரி ஓட்டுனர்.இவர், எம்.கே.பி.நகர், வடக்கு அவென்யூ சாலையில், 3ம் தேதி லாரியை நிறுத்தியிருந்தார். அதில், 25 ஆயிரம் கிலோ நெல் மூட்டைகள் இருந்தன. அடுத்த நாள் லாரியை எடுக்க வந்தபோது, லாரி

எம்.கே.பி.நகர் : எம்.கே.பி.நகரில், 25 ஆயிரம் கிலோ நெல் மூட்டைகளுடன் லாரியை கடத்தியோரை போலீசார் கைது செய்தனர்.

கொடுங்கையூர், கே.கே.டி.நகர், எட்டாவது பிளாக், முதல் தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 50; லாரி ஓட்டுனர்.இவர், எம்.கே.பி.நகர், வடக்கு அவென்யூ சாலையில், 3ம் தேதி லாரியை நிறுத்தியிருந்தார். அதில், 25 ஆயிரம் கிலோ நெல் மூட்டைகள் இருந்தன. அடுத்த நாள் லாரியை எடுக்க வந்தபோது, லாரி கடத்தப்பட்டது தெரிந்தது.இது குறித்து, எம்.கே.பி.நகர் போலீசார் விசாரித்தனர்.

இதில், மாதவரம் நோக்கி லாரியை ஓட்டி சென்றது தெரியவந்தது.விசாரணையில், பிராட்வேயைச் சேர்ந்த ராஜா, 44, வியாசர்பாடியைச் சேர்ந்த பார்த்தசாரதி, 25, ஓரிக்கையைச் சேர்ந்த ராஜா, 42, செல்வரசு, 43, புளியந்தோப்பைச் சேர்ந்த ப்ரியா, 37, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.அவர்களை நேற்று கைது செய்த போலீசார், நெல் மூட்டைகள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X