சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பவானி ஆற்றில் சிக்கித் தவித்த லாரி கிளீனர் பத்திரமாக மீட்பு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:பவானி ஆற்றில் திடீரென வந்த தண்ணீரால், குளித்துக்கொண்டிருந்த லாரி கிளீனர், கரைக்கு வர முடியாமல் தவித்தார். தீயணைப்புத் துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர்.குன்னூர் காத்தாடி மட்டத்தை சேர்ந்தவர் சந்திர சேகரன், 27; லாரி கிளீனர். நேற்று மேட்டுப்பாளையத்திற்கு கிழங்கு மூட்டைகளை ஏற்றி வந்த, லாரியில் வந்தார்.கிழங்கு மூட்டைகளை இறக்கும் வரை, பவானி ஆற்றில்
 பவானி ஆற்றில் சிக்கித் தவித்த  லாரி கிளீனர் பத்திரமாக மீட்பு

மேட்டுப்பாளையம்:பவானி ஆற்றில் திடீரென வந்த தண்ணீரால், குளித்துக்கொண்டிருந்த லாரி கிளீனர், கரைக்கு வர முடியாமல் தவித்தார். தீயணைப்புத் துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர்.குன்னூர் காத்தாடி மட்டத்தை சேர்ந்தவர் சந்திர சேகரன், 27; லாரி கிளீனர். நேற்று மேட்டுப்பாளையத்திற்கு கிழங்கு மூட்டைகளை ஏற்றி வந்த, லாரியில் வந்தார்.கிழங்கு மூட்டைகளை இறக்கும் வரை, பவானி ஆற்றில் குளித்து வந்து விடலாம் என, நந்தவனம் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் திடீரென தண்ணீர் அதிகமாக வந்தது. உடனடியாக நடுஆற்றில் உள்ள, மண் திட்டின் மீது ஏறி நின்றார். பில்லூர் அணையில், மின்சாரம் உற்பத்தி செய்ய தண்ணீர் திறந்து விட்டதால், ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்துள்ளது.மண் திட்டு வரை தண்ணீர் உயர்ந்ததால், தன்னை காப்பாற்றும்படி சத்தம் போட்டு உள்ளார். ஊர்க்காவல் படை வீரர் அசாருதீன், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.தீயணைப்பு அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான, தீயணைப்பு வீரர் தினேஷ்குமார், தண்ணீரில் நீந்திச் சென்று, அவரை உயிருடன் பத்திரமாக மீட்டு வந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X