பொது செய்தி

தமிழ்நாடு

ராஜன் கண் மருத்துவமனை 26ம் ஆண்டு விழா

Added : ஆக 08, 2021
Share
Advertisement
சென்னை : ராஜன் கண் மருத்துவமனையின் 26ம் ஆண்டு விழா, சென்னை, தி.நகரில் நேற்று நடந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, ஆண்டு மலரை வெளியிட்டார்.தொடர்ந்து, பல ஆண்டுகளாக மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், ராஜன் கண் மருத்துவமனை தலைவர்

சென்னை : ராஜன் கண் மருத்துவமனையின் 26ம் ஆண்டு விழா, சென்னை, தி.நகரில் நேற்று நடந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, ஆண்டு மலரை வெளியிட்டார்.

தொடர்ந்து, பல ஆண்டுகளாக மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், ராஜன் கண் மருத்துவமனை தலைவர் மருத்துவர் மோகன் ராஜன், நிர்வாக இயக்குனர் மருத்துவர் சுஜாதா மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கூறியதாவது:

கண் மருத்துவம் என்பது மருத்துவத்துறையின் ஒரு சிறப்பு பிரிவாக உள்ளது. இது, உடற்கூறியல், உடலியல், கண் மற்றும் சுற்றுப்பாதை நோய்களை சார்ந்தவை.கண் மருத்துவரின் திறமை மற்றும் அறுவை சிகிச்சை நிபுணத்துவத்திற்கு, நவீன காலத்தில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் உதவியாக உள்ளன.ராஜன் கண் மருத்துவமனை 26 ஆண்டுகளாக, உலகளாவிய தரத்திற்கு சிறந்த கண் பராமரிப்பு அளிப்பதில் நங்கூராமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:கொரோனா காலத்தில் கருப்பு பூஞ்சை நோய் தமிழகத்தில் 4,000த்திற்கும் மேற்பட்டோரை தாக்கியது. இந்த நோய் குறித்த ஆய்வு தேவைப்பட்டது. இதற்காக 13 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவிற்கு முதலில் வந்தது மோகன் ராஜன் பெயர் தான்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X