தமிழ்நாடு

சென்னை போலீசில் 'டிரான்ஸ்பர் கமிட்டி'

Added : ஆக 08, 2021
Share
Advertisement
சென்னை : சென்னையில் முதல் முறையாக, போலீசார் பணியிட மாறுதல் பெற, பிரத்யேக குழு அமைத்து, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுஉள்ளார்.அதில், இரண்டாம் நிலை காவலர் முதல் உதவி ஆய்வாளர் வரை பணியிட மாற்றம் செய்வதற்காக, அந்தந்த காவல் மாவட்டம் இணை கமிஷனர் தலைமையில், மூன்று பேர் கொண்ட குழு செயல்பட உள்ளது.மத்திய குற்றப்பிரிவு அலுவலக பணியிட மாற்றம் செய்ய, மத்திய குற்றப்பிரிவு

சென்னை : சென்னையில் முதல் முறையாக, போலீசார் பணியிட மாறுதல் பெற, பிரத்யேக குழு அமைத்து, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுஉள்ளார்.

அதில், இரண்டாம் நிலை காவலர் முதல் உதவி ஆய்வாளர் வரை பணியிட மாற்றம் செய்வதற்காக, அந்தந்த காவல் மாவட்டம் இணை கமிஷனர் தலைமையில், மூன்று பேர் கொண்ட குழு செயல்பட உள்ளது.மத்திய குற்றப்பிரிவு அலுவலக பணியிட மாற்றம் செய்ய, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நுண்ணறிவு பிரிவு பணியிட மாற்றங்களுக்கு, நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறையில் பணியிட மாற்றம் தொடர்பான உத்தரவை, கூடுதல் கமிஷனர் தலைமையகம் மற்றும் மத்திய குற்றப்பிரிவு ஆகியோர் பணியிட மாறுதலுக்கான உத்தரவை பிறப்பிப்பர்.மேலும், கூடுதல் கமிஷனர் தலைமையில், துணை கமிஷனர் நிர்வாகம் தலைமையிலான குழுவினர் ஆயுதப்படை காவலர்கள் தொடர்பான பணியிட மாறுதலை கவனிக்க உள்ளனர்.

மண்டல இட மாற்றங்கள் சட்டம் -- ஒழுங்கு, போக்குவரத்து காவலர்களுக்கான பணியிட மாற்ற உத்தரவை கூடுதல் கமிஷனர் பிறப்பிப்பார். காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவலர்களை கூடுதல் கமிஷனர் தலைமையிலான குழு, பட்டியல் தயாரித்து, தலைமையிட கூடுதல் கமிஷனருக்கு அனுப்பி, அவர் வெளியிடுவார். அனைத்து துறை காவலர்களுக்கும் பணியிட மாறுதலுக்கான, கமிட்டி அமைக்கப்பட்டிருப்பது, போலீசாரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X