சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிசை வீட்டுக்கு மர்ம நபர்கள் தீ!

Added : ஆக 08, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி அடுத்த செம்மாண்டாம் பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ், 35. சூலூர் ஒன்றிய பா.ஜ., நிர்வாகியான இவர், கருமத்தம்பட்டி - அன்னூர் ரோட்டில் கிட்டாம்பாளையத்தில் பேக்கரி நடத்தி வருகிறார். பேக்கரிக்கு பின்புறம், ஊழியர்கள் தங்குவதற்கு குடிசை வீடு உள்ளது. அருகில் இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தியுள்ளார்.நேற்று முன்தினம் இரவில், குடிசைக்கு மர்ம நபர்கள்
 குடிசை வீட்டுக்கு   மர்ம நபர்கள் தீ!

கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி அடுத்த செம்மாண்டாம் பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ், 35. சூலூர் ஒன்றிய பா.ஜ., நிர்வாகியான இவர், கருமத்தம்பட்டி - அன்னூர் ரோட்டில் கிட்டாம்பாளையத்தில் பேக்கரி நடத்தி வருகிறார். பேக்கரிக்கு பின்புறம், ஊழியர்கள் தங்குவதற்கு குடிசை வீடு உள்ளது. அருகில் இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தியுள்ளார்.நேற்று முன்தினம் இரவில், குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. தீ மள மளவென பரவியதில், குடிசை மற்றும் இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின.இதுகுறித்து, அவர் கருமத்தம்பட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X