பொது செய்தி

இந்தியா

பெங்களூரு லால் பாக் பூங்காவில் பூங்காவனம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
பெங்களூரு : பெங்களூரு லால் பாக் பூங்காவில் கூடுதல் அழகை ஏற்படுத்தும் பூங்காவனம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.பெங்களூரில் பார்வையாளர்களை கவரும் இயற்கை சூழல் நிறைந்திருக்கும் இடங்களில் ஒன்று லால்பாக் பூங்கா.இந்த பூங்காவிற்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் புதிய தோட்டம் அமைப்பதற்கு தோட்டக்கலை துறையினர் ஏற்பாடு செய்தனர். அதற்கான பணிகள் முடிவும் நிலையில்
பெங்களூரு லால் பாக் பூங்காவில் பூங்காவனம்

பெங்களூரு : பெங்களூரு லால் பாக் பூங்காவில் கூடுதல் அழகை ஏற்படுத்தும் பூங்காவனம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

பெங்களூரில் பார்வையாளர்களை கவரும் இயற்கை சூழல் நிறைந்திருக்கும் இடங்களில் ஒன்று லால்பாக் பூங்கா.இந்த பூங்காவிற்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் புதிய தோட்டம் அமைப்பதற்கு தோட்டக்கலை துறையினர் ஏற்பாடு செய்தனர். அதற்கான பணிகள் முடிவும் நிலையில் இருப்பாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தோட்டக்கலை அதிகாரிகள் கூறியதாவது:லால்பாக் பூங்காவில் காய்ந்த இலை சருகுகளை கொட்டுவதற்கென தாழ்வான பகுதி உள்ளது. பூங்காவில் சேகரிக்கப்படும், இலை சருகுகள் இங்கு கொட்டப்பட்டு வந்தன.தற்போது, அப்பகுதியில் பூங்காவனமாக மாற்றுவதற்கான பணிகள் தீவிரமாக நடக்கிறது. 'சங்கன் கார்டன்' என்ற சரிவு பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த பூங்கா, மலைப்பகுதியில் காணப்படும் பூங்கா போன்று இருக்கும்.

இந்த பணிகள், 2016ல், துவக்கப்பட்டது. இப்பணிகளுக்கு 75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டன.மலர் கண்காட்சியின் போது பூங்காவை செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது. கொரோனாவால் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதற்கு முன்பாகவே பூங்காவை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.தாமரை, ஆர்சிட் உள்ளிட்ட மலர்கள் நடவு செய்யப்பட்டு வருகிறது. கழிவுகள் கொட்டும் இடத்தை பூங்காவாக மாற்றியதற்கு மக்கள் வரவேற்றுள்ளனர்.இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X