பொது செய்தி

இந்தியா

வாகனங்களின் பேன்சி பதிவு எண்களுக்கு வரும் 11ல் ஏலம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
பெங்களூரு : கர்நாடக போக்குவரத்துத்துறை சார்பில், வாகனங்களின் பேன்சி பதிவு எண்களுக்கான ஏலம், வரும், 11ல் மதியம் 12:30 மணிக்கு நடக்கும்.போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:வாகன உரிமையாளர்களின் வசதிக்காக, பேன்சி பதிவு எண்கள், ஆக., 11ல் ஏலம் விடப்படும். பெங்களூரு சாந்திநகரின் மத்திய அலுவலகத்தில் மதியம் 12:30 மணிக்கு ஏலம் நடக்கும். பிடித்தமான பேன்சி எண் விரும்புவோர், வாகனம்

பெங்களூரு : கர்நாடக போக்குவரத்துத்துறை சார்பில், வாகனங்களின் பேன்சி பதிவு எண்களுக்கான ஏலம், வரும், 11ல் மதியம் 12:30 மணிக்கு நடக்கும்.

போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:வாகன உரிமையாளர்களின் வசதிக்காக, பேன்சி பதிவு எண்கள், ஆக., 11ல் ஏலம் விடப்படும். பெங்களூரு சாந்திநகரின் மத்திய அலுவலகத்தில் மதியம் 12:30 மணிக்கு ஏலம் நடக்கும். பிடித்தமான பேன்சி எண் விரும்புவோர், வாகனம் வாங்கியதற்கான ஆவணங்கள், முகவரி உட்பட மற்ற ஆவணங்களுடன், விண்ணப்பிக்க வேண்டும்.

பேன்சி பதிவு எண் பெற கட்டணம் 75 ஆயிரம் ரூபாய்க்கான டி.டி.,யை, மாநில போக்குவரத்து வாரிய செயலர் பெயரில் பெற்று, விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.1, 123, 1234, 10, 11, 111, 1111, 100, 1000, 9, 99, 90, 900, 909, 9999 உட்பட, பல பேன்சி எண்கள், ஏலத்தில் இடம் பெறும். மற்ற போக்குவரத்துத்துறை அலுவலகங்களில், மீதியுள்ள பேன்சி எண்களும் ஏலம் விடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X