பொது செய்தி

தமிழ்நாடு

சமைக்காமலே அறுசுவை விருந்து!

Added : ஆக 08, 2021
Share
Advertisement
'அடுப்பில் வைத்து சமைக்காமல், வடை, பாயசத்துடன் அறுசுவை விருந்தா...சான்சே இல்லை' என்றோம்.''ஏன் முடியாது, எங்கள் ஓட்டலுக்கு வாங்க; நாங்கள் கொடுக்கிறோம். ''நோ பாயில்; நோ ஆயில்'' இதுதான் எங்கள் சமையல் கான்சப்ட்,'' என்கிறார் படையல் உணவகத்தின் உரிமையாளர் சிவா.கோவை வரதராஜபுரம் காமராஜர் ரோடு மணிஸ் தியேட்டர் அருகில் உள்ளது, 'படையல்' இயற்கை உணவகம். இங்கு மற்ற
 சமைக்காமலே அறுசுவை விருந்து!

'அடுப்பில் வைத்து சமைக்காமல், வடை, பாயசத்துடன் அறுசுவை விருந்தா...சான்சே இல்லை' என்றோம்.''ஏன் முடியாது, எங்கள் ஓட்டலுக்கு வாங்க; நாங்கள் கொடுக்கிறோம். ''நோ பாயில்; நோ ஆயில்'' இதுதான் எங்கள் சமையல் கான்சப்ட்,'' என்கிறார் படையல் உணவகத்தின் உரிமையாளர் சிவா.கோவை வரதராஜபுரம் காமராஜர் ரோடு மணிஸ் தியேட்டர் அருகில் உள்ளது, 'படையல்' இயற்கை உணவகம். இங்கு மற்ற ஓட்டல்களை போல், எல்லா வகை சைவ உணவும் அடுப்பில் வைத்து சமைக்காமல், எண்ணெய் பயன்படுத்தாமல் மூன்று வேளையும் உணவு பரிமாறப்படுகிறது.ஆச்சரியம் தாங்காமல், இதன் உரிமையாளர் சிவகுமாரிடம் பேசினோம்...''கடந்த, 20 ஆண்டுகளாக அடுப்பு வைத்து சமைக்காமல், எண்ணெய் பயன்படுத்தாமல் சமைப்பது எப்படி என்ற பயிற்சி வகுப்பை நடத்தி வந்தேன். இந்த ஆண்டு ஜனவரி முதல், 'படையல்' என்ற இந்த இயற்கை உணவு உணவகத்தை நடத்தி வருகிறேன்.மற்ற ஓட்டல்களில் சமைத்து, உணவு கொடுப்பது போல், இங்கு அடுப்பில் நெருப்பு மூட்டி சமைக்காமல், எண்ணெய் சேர்த்து வறுக்காமல், மூன்று வேளை உணவும் கொடுக்கிறோம்.வார நாட்கள் முழுவதும், காலை இட்லி, தோசை உள்ளிட்ட ஐட்டங்களுடன் டிபன், மதியம் வடை, பாயாசத்துடன் சாப்பாடு கொடுக்கிறோம்.வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் 'பபே' லன்ஞ்ச் கொடுக்கிறோம். இதில், 15 வகை உணவு இருக்கும். மாதத்தில் ஒருநாள் தலைவாழை விருந்து கொடுக்கிறோம்.அதில், 20 வகையான உணவு பதார்த்தங்கள் இருக்கும். நாங்கள் சமைப்பதை வடிக்கையாளர்கள் பார்க்க விரும்பினால், சமையலறைக்கு வந்து பார்க்கலாம். இந்த சமையல் முறையை கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நேரில் வந்தும், ஆன்லைன் வழியாகவும் கற்றுக்கொள்ளலாம்,'' என, சொல்லி முடித்தார் சிவக்குமார். பேசி முடித்ததும் சாப்பிட்டு பார்த்தோம். சும்மா சொல்லக்கூடாது. சமைக்கும் உணவு எட்ட தள்ளிதான் நிற்கணும் போங்க...அப்படி ஒரு புது டேஸ்ட்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X