பொது செய்தி

தமிழ்நாடு

இந்த ஆரோக்கிய மாற்றம்...தொடர வேண்டும்!

Added : ஆக 08, 2021
Share
Advertisement
தமிழகத்தில் அரசு துறைகளில் இருந்த, பல அதிகாரிகள் மாற்றப்பட்டு, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் மற்றும் கோரிக்கைகள், உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, தீர்வு காணப்படுவதாக சொல்லப்படுகிறது.உண்மைதானா...? கோவையை சேர்ந்த பிரமுகர்கள், தொழில் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கேட்டோம்!ஹரிகரன், ஓய்வு பெற்ற தபால் அலுவலர்ஆட்சி
 இந்த ஆரோக்கிய மாற்றம்...தொடர வேண்டும்!

தமிழகத்தில் அரசு துறைகளில் இருந்த, பல அதிகாரிகள் மாற்றப்பட்டு, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் மற்றும் கோரிக்கைகள், உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, தீர்வு காணப்படுவதாக சொல்லப்படுகிறது.உண்மைதானா...? கோவையை சேர்ந்த பிரமுகர்கள், தொழில் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கேட்டோம்!ஹரிகரன், ஓய்வு பெற்ற தபால் அலுவலர்

ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அதிகாரிகளின் செயல்பாடுகளில், நல்ல மாற்றம் தெரிகிறது. குறிப்பாக, பத்திர பதிவு அலுவலகங்களின் செயல்பாட்டில், நிறைய மாற்றம் தெரிகிறது. ஆனால் ஆர்.டி.ஒ., அலுவலகங்களில் பழைய நிலைதான் தொடர்கிறது. அங்கு பணம் கொடுக்காமல், ஒரு வேலையும் நடப்பதில்லை. அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதை தடுக்க நடவடிக்கை தேவை.டாக்டர் மோனி, மன நல சிறப்பு மருத்துவர்

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, இந்த இரண்டு மாதத்தில், உயர் அதிகாரிகள் மத்தியில் நிறைய மாற்றகள் தெரிகின்றன. பொதுமக்களின் புகார்களை கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுக்கின்றனர். பிரச்னைகள் உள்ள இடத்துக்கு, நேரில் சென்று பார்வையிட்டு தீர்வு காண்கின்றனர். இவை எல்லாம் கடந்த காலத்தில் இல்லை. இதை நான் மட்டும் சொல்லவில்லை. சமீபத்தில் பலபேர் என்னிடம் இதை கூறி உள்ளனர். இது தொடர்ந்தால் சிறப்பாக இருக்கும்.ஜேம்ஸ், டாக்ட் அமைப்பு

கடந்த ஆட்சியில் கொடுக்காமல் நிலுவையில் வைத்து இருந்த, அனைத்து மானிய தொகையையும் முழுமையாக கொடுத்துள்ளனர். இது, சிறுதொழில் செய்வோருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய உதவியாகும். சிறப்பாக தொழிலை நடத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சிறுகுறு தொழில் முனைவோர்கள் சங்கங்களின் கருத்துக்களை கேட்டுள்ளனர். பட்ஜெட்டுக்கு பிறகு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவாார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறோம். மின்சாரத்தை பொறுத்தவரை பழுது நீக்கும் பணிகள் முடிந்த பிறகு, மின் தடை இருக்காது என, மின் வாரிய அதிகாரிகள் கூறி உள்ளனர்.கந்தசாமி, மாநில பொதுச்செயலாளர், விவசாயிகள் சங்கம்

ஆட்சி மாறினாலும், அதிகாரிகள் மனம் இன்னும் மாறவில்லை. பணம் வாங்கமால் எதுவும் செய்வதில்லை. அரசு வேளாண் துறைகள் மிகவும் மோசமாக உள்ளன. அரசு கொடுக்கும் மானியங்கள் முழுமையாக, விவசாயிகளுக்கு போய் சேர்வதில்லை. இலவச சொட்டுநீர் பாசனத்திட்டம் என்பது பெயரளவில்தான் இருக்கிறது. பணம் வாங்காமல் எந்த கம்பெனியும் பிளான்ட் அமைத்து கொடுப்பதில்லை. ஆட்சி மாறினால் மட்டும் போதாது, இந்த காட்சிகளும் மாற வேண்டும்.வெண்ணிலா, வழக்கறிஞர்

ஆட்சிக்கு வந்தவுடன் எல்லா துறைகளிலும், பல அதிகாரிகளை மாற்றி உள்ளனர். அதற்கு பதிலாக திறமையாக செயல்படக்கூடிய அதிகாரிகளை, நியமனம் செய்துள்ளனர். இதுவே ஒரு நல்ல மாற்றமாக தெரிகிறது. பொறுப்பேற்றுள்ள அதிகாரிகள் நேர்மையாக செயல்பட்டால் போதும். அரசுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்து விடும். ஓர் ஆண்டு கடந்த பிறகுதான், இந்த ஆட்சி மாற்றத்தின் விளைவுகள் தெரியவரும்.கோதனவள்ளி, சமூக சேவகி

கணபதி பகுதியில் உள்ள, பொது சாக்கடை அடைப்பை சுத்தம் செய்ய கோரியும், அங்குள்ள பூங்காவை பாரமரிக்க கோரியும், பல புகார் மனுக்கள் கொடுத்தோம். யாரும் செய்து கொடுக்க முன் வரவில்லை. ஆட்சி மற்றத்துக்கு பிறகு, மாநகராட்சி அதிகாரிகள் இந்த இரண்டையும் உடனே சரி செய்துள்ளனர். இதே போல் எப்போதும் இருந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X