பொது செய்தி

இந்தியா

டிச., 18ல் நுழைவுத் தேர்வு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
பெங்களூரு : ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லுாரியில், எட்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, டிச., 18ல் நுழைவுத் தேர்வு நடக்கிறது.உத்தரகாண்ட் டேராடூனில் ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லுாரியில், 2022 ஜூலையில், எட்டாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.இதுகுறித்து ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லுாரி வெளியிட்டுள்ள அறிக்கை:எட்டாம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு டிச.,18 ல்

பெங்களூரு : ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லுாரியில், எட்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, டிச., 18ல் நுழைவுத் தேர்வு நடக்கிறது.

உத்தரகாண்ட் டேராடூனில் ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லுாரியில், 2022 ஜூலையில், எட்டாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.இதுகுறித்து ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லுாரி வெளியிட்டுள்ள அறிக்கை:எட்டாம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு டிச.,18 ல் பெங்களூரில் நடக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிப்போர், 11 வயதுக்கு குறையாமலும், 2022 ஜூலையில் 13 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

சேர்க்கையின் போது அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் ஏழாம் வகுப்பு முடித்திருப்பது அல்லது படித்துக்கொண்டிருக்க வேண்டும்.கடந்த நுழைவுத்தேர்வு வினாத்தாள்கள் மற்றும் டிச., நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தை, 'ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லுாரி, காரி கான்ட், டேராடூன், உத்தரகாண்ட் என்ற முகவரியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.ஆன்லைனில் கட்டணம்விண்ணப்ப படிவம், மற்றும் தேர்வுக்கான மாதிரி புத்தகம் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு ஆன்லைனில், www.rimc.gov.in என்ற இணைப்பில் சென்று கட்டணம் செலுத்த வேண்டும்.

பொது பிரிவினருக்கு 600 ரூபாய்; எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு 555 ரூபாயும் செலுத்த வேண்டும் அல்லது, 'எஸ்.பி.ஐ. டெல் பவன், டெராடூன் (வங்கி குறியீடு எண் 01576), உத்தரகான்ட் என்ற முகவரியில் டிமான்ட் டிராப்ட்டாகவும் எடுத்து அனுப்பலாம். தாமதமாக வரும் தபாலுக்கு கல்லுாரி பொறுப்பேற்காது.

விண்ணப்ப படிவத்துடன், ஐந்து பாஸ்போர்ட் புகைப்படம், நகராட்சி அல்லது கிராம பஞ்சாயத்தால் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ் நகல், எஸ்.சி., - எஸ்.டி., விண்ணப்பதாரர்கள், அதற்கான ஜாதி சான்றிதழ் நகல், பள்ளியிலிருந்து வழங்கப்படும் மாணவருக்கான அசல் சான்றிதழ், தாசில்தார் சான்றொப்பம் பெற்ற முகவரி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை புகைப்படத்துடன் நகல்களை இணைக்க வேண்டும்.கூடுதல் விபரங்கள் பெற 080 - 2558 9459 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள மாவட்ட சைனிக் நல மற்றும் மீள்குடியேற்ற அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X