பொது செய்தி

இந்தியா

அரசு உயர் நிலைப்பள்ளியில் கணித ஆய்வு கூடம்: ஆசிரியர் அசத்தல்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
பல்லாரி : தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு பல்லாரி மாவட்டம், கூட்லிகி தாலுகா, சந்திரசேகரபுரா கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில், ஆசிரியர் ஒருவர், கணித ஆய்வு கூடம் அமைத்து, பெற்றோர், மாணவர்களை ஈர்த்துள்ளார்.பொதுவாக தனியார் பள்ளிகளில் வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம் என வெவ்வேறு ஆய்வு கூடங்கள் அமைந்திருக்கும்.பாடங்கள் படித்து ஆய்வகங்களில் இருப்பதை
அரசு உயர் நிலைப்பள்ளியில் கணித ஆய்வு கூடம்: ஆசிரியர் அசத்தல்

பல்லாரி : தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு பல்லாரி மாவட்டம், கூட்லிகி தாலுகா, சந்திரசேகரபுரா கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில், ஆசிரியர் ஒருவர், கணித ஆய்வு கூடம் அமைத்து, பெற்றோர், மாணவர்களை ஈர்த்துள்ளார்.

பொதுவாக தனியார் பள்ளிகளில் வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம் என வெவ்வேறு ஆய்வு கூடங்கள் அமைந்திருக்கும்.பாடங்கள் படித்து ஆய்வகங்களில் இருப்பதை கண்கூடாக பார்த்து மாணவர்களுக்கு கல்வி சொல்லி கொடுப்பர்.இதனால் பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அத்தகைய பள்ளிகளில் சேர்க்க முந்துவர்.

ஆனால், தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு, பல்லாரி மாவட்டம், கூட்லிகி தாலுகா, சந்திரசேகரபுரா கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலையப்பள்ளி, பெற்றோரின் முதல் தேர்வாக உள்ளது.இதற்கு ஒரே காரணம், அப்பள்ளியின் கணித ஆசிரியர் ஸ்ரீகாந்த் என்றால் மிகையாகாது.

ஆம், பள்ளி அறையை கணித ஆய்வு கூடமாக மாற்றி மாணவர்களுக்கு எளிய முறையில் சொல்லி கொடுப்பதே பெற்றோரின் தேர்வுக்கு காரணமாகும்.கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், கணித பார்முலாக்களை எளிய முறையில் நினைவில் கொள்வது; கிராப் வரை படங்கள், குறியீடுகள், பின்னம், கலப்பு பின்னம், வாய்ப்பாடு, தசமம், விகிதமுறைகள் உட்பட வெவ்வேறு விதமான கணித முறைகள் வரைந்து சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு அதன் மூலம் செயல்முறையில் காண்பித்து விளக்குகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X