எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

வணிக தளங்கள் உங்கள் தகவல்களை சேமிப்பதை எப்படி தடுக்கலாம்?

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 08, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கொரோனா வைரஸ் நம் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. அதில் முக்கியமானது, ஆன்லைன் ஷாப்பிங்.உணவு, ஆடைகள், அழகுசாதன பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆன்லைனில் வாங்கப்பட்ட நிலையில், இப்போது மளிகை பொருட்கள், காய்கறி, இறைச்சி என அடிப்படை தேவைகளுக்கும், ஆன்லைனை தேடுகிறோம்.இணையதளத்தில் ஒரு மொபைல் போன் வாங்குவதற்காக நீங்கள் தேடினால், வேறு
வணிகதளங்கள், தகவல்கள்,

கொரோனா வைரஸ் நம் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. அதில் முக்கியமானது, ஆன்லைன் ஷாப்பிங்.

உணவு, ஆடைகள், அழகுசாதன பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆன்லைனில் வாங்கப்பட்ட நிலையில், இப்போது மளிகை பொருட்கள், காய்கறி, இறைச்சி என அடிப்படை தேவைகளுக்கும், ஆன்லைனை தேடுகிறோம்.இணையதளத்தில் ஒரு மொபைல் போன் வாங்குவதற்காக நீங்கள் தேடினால், வேறு இணையதளங்களுக்கு நீங்கள் செல்லும் போது, அது குறித்து விளம்பரங்கள் வரும்.குறிப்பிட்ட பொருள் குறித்த விளம்பரம்மீண்டும், மீண்டும் உங்கள் மொபைல் அல்லது லேப்டாப்பில் 'பாப் - அப்' ஆகிக்கொண்டே இருக்கும். இது எப்படி என நீங்கள் சிந்தித்துள்ளீர்களா? காரணம், உங்கள் தகவல்களை இணையதளங்கள் சேமிக்கின்றன.


எவ்வாறு சேமிக்கின்றனர்?

அனைத்து இணையதள பிரவுசர்களும், உங்கள் டேட்டாவை 'குக்கீஸ்' எனும் 'டெக்ஸ்ட் பைலாக' சேமிக்கும் வகையிலே உருவாக்கப்பட்டுள்ளன.நீங்கள் தேடுவதற்கு பயன்படுத்தப்படும் சொற்கள், சென்ற இணையதளம், உங்கள் மொபைல் அல்லது சிஸ்டமின் ஐ.பி/, முகவரி ஆகிய தகவல்களை குறிப்பிட்ட இணையதளம் அல்லது செயலி மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனங்களால் சேமிக்கப்படும். சிஸ்டம் அல்லது மொபைலில் இந்த குக்கீஸ்கள் சேமிக்கப்படும். இதன் மூலம், உங்கள் தேடல் காண்காணிக்கப்பட்டு, அதுகுறித்த விளம்பரம், தகவல்கள் மீண்டும் காண்பிக்கப்படுகிறது.


எப்படி தடுக்கலாம்?

* ஒரு இணையதளத்தில் நுழைந்தவுடன், குக்கீஸ்களை ஏற்றுக்கொள்கிறீர்களா என்ற கேள்வியுடன், ஒரு 'பாப் - அப்' தோன்றும். இதற்கு, எப்போதும் நீங்கள் இல்லை என பதிவு செய்யுங்கள்.

* 'நியு இன்காக்னிட்டோ (incognito) விண்டோ' மூலம் இணையத்தை பயன்படுத்துவதன் மூலம், உங்கள் தகவல்கள் சேமிக்கப்படுவதை தடுக்க முடியும். குரோமின் மேல் பகுதியில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்தால், 'நியு இன்கோகினட்டோ (incognito) டேப்' ஆப்சன் இருக்கும்,

* இணையதள செட்டிங்சில், பிரைவசியின் கீழ் 'டூ நாட் டிராக்' என்ற தேர்வையும் தேர்ந்தெடுத்து, உங்கள் தரவுகள் கண்காணிக்கப்படுவதை தடுக்க முடியும்.

* கூகுள் குரோம் போன்ற இணையதள செட்டிங்சில், பிரைவசியின் கீழ், 'கிளியர் பிரவுசிங் டேட்டா' என இருக்கும். இதில் உள் சென்று, அனைத்து தரவுகளையும் தினமும் கிளியர் செய்து கொள்ளவும்.

* குக்கீஸ்கள் சேமிக்கப்படுவதை தடுக்க, பிரைவசியின் கீழ், 'குக்கீஸ் அண்ட் அதர் சைட் டேட்டா' வை கிளிக் செய்து, குக்கீஸ்களை பிளாக் செய்யலாம்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஆக-202120:12:03 IST Report Abuse
அப்புசாமி வணிக நிறுவனங்கள் உங்கள் தகவல்களை சேகரிப்பதை / சேமிப்பதை தடுக்க முடியும். ஆனால், கூகுள் அதே தகவல்களை சேமிப்பதை தடுக்க முடியாது. கூகுளே எல்லாத்தையும் சேகரிச்சு வித்துரும். ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel
rastha -  ( Posted via: Dinamalar Android App )
08-ஆக-202118:54:31 IST Report Abuse
rastha Download, install and start using Brave browser in both desktop and mobile devices. set DuckDuckGo as the default search engine. Even watch YouTube through this browser. Watch it in incognito mode. Rest assured, your actions will not be tracked.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
08-ஆக-202118:48:11 IST Report Abuse
Mohan இந்தக் கருமத்துக்குத்தான், தடவுரத தூக்கிப்போட்டுட்டு அமுக்குரத வெச்சுக்கனும்.(phone)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X