முதல்வர் பதவியில் அமர்ந்தவருக்கு அதன் கஷ்டம் தெரியும்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'முதல்வர் பதவியில் அமர்ந்தவருக்கு அதன் கஷ்டம் தெரியும்'

Added : ஆக 08, 2021
Share
உத்தரகன்னடா : ''தொண்டராக உள்ளவருக்கு, எம்.எல்.ஏ., வாக வேண்டும்; எம்.எல்.ஏ., வானவுடன், அமைச்சராக வேண்டும்; அமைச்சரான பின், முதல்வர் பதவி வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். துறை ஒதுக்கியதில், அனைவரையும் சமாதானப்படுத்த முடியாது. முதல்வர் பதவியில் அமர்ந்தவருக்கு அதன் கஷ்டம் தெரியும்,'' என அமைச்சர் சிவராம் ஹெப்பார் தெரிவித்தார்.உத்தரகன்னடா கார்வாரில், அவர் நேற்று
'முதல்வர் பதவியில் அமர்ந்தவருக்கு அதன் கஷ்டம் தெரியும்'

உத்தரகன்னடா : ''தொண்டராக உள்ளவருக்கு, எம்.எல்.ஏ., வாக வேண்டும்; எம்.எல்.ஏ., வானவுடன், அமைச்சராக வேண்டும்; அமைச்சரான பின், முதல்வர் பதவி வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். துறை ஒதுக்கியதில், அனைவரையும் சமாதானப்படுத்த முடியாது. முதல்வர் பதவியில் அமர்ந்தவருக்கு அதன் கஷ்டம் தெரியும்,'' என அமைச்சர் சிவராம் ஹெப்பார் தெரிவித்தார்.

உத்தரகன்னடா கார்வாரில், அவர் நேற்று கூறியதாவது:முதல்வர் எந்த துறையை கொடுத்தாலும், அத்துறையில் அரசுக்கும், கட்சிக்கும் கவுரவம் கிடைக்கும் வகையில் பணியாற்றுவோம். நான் கேட்ட துறையையே, முதல்வர் அளித்துள்ளார். தொழிலாளர் நலத்துறை கிடைத்துள்ளது. துறை ஒதுக்கியதில், யாருக்கும் அதிருப்தி இல்லை.நிறைய ஆசைதொண்டராக உள்ளவருக்கு, எம்.எல்.ஏ., வாக வேண்டும்; எம்.எல்.ஏ., வானவுடன், அமைச்சராக வேண்டும்;

அமைச்சரான பின், முதல்வர் பதவி வேண்டும்; இதே துறை வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.துறை ஒதுக்கியதில், அனைவரையும் சமாதானப்படுத்த முடியாது. முதல்வர் பதவியில் அமர்ந்தவருக்கு, அதன் கஷ்டம் தெரியும்.முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, ரகசிய கூட்டம் நடத்தியது குறித்து, எனக்கு தெரியவில்லை. அவர் இப்போதும் என் நண்பர்.பட்கலில் ஐ.எஸ்.ஐ.எஸ்., தொடர்பிலிருந்த ஒருவரை, கைது செய்துள்ளது பற்றி, உத்தரகன்னட மாவட்ட போலீஸ் எஸ்.பி., தகவல் தெரிவித்துள்ளார்.நடவடிக்கைகள் குறித்து, டில்லியிலேயே முடிவானது. பல கோணங்களில் விசாரணை நடத்தியே, அவரை கைது செய்துள்ளனர். கூடுதல் விசாரணைக்காக டில்லி அழைத்து செல்லப்பட்டுள்ளார்.


இடமில்லை


பயங்கரவாதம், தேசதுரோக சம்பவங்கள், எந்த தாலுகா, எந்த மாவட்டம், எந்த சமுதாயம், மதமாக இருந்தாலும் அலட்சியப்படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை.அரசு இதை தீவிரமாக கருதும். போலீஸ்துறை சரியான நேரத்தில், நடவடிக்கை எடுக்கும்.உத்தரகன்னடாவில் கொரோனா பரவும் அளவு, ஒரு சதவீதமாக உள்ளது. எல்லைப்புறங்களில், இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே முதல்வருடன், உத்தரகன்னடாவில், வெள்ளப்பெருக்கு சேதங்கள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டது. 200 கோடி ரூபாய் செலவில், சாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழை ஓரளவு குறைந்துள்ளது. அடுத்து என்ன பணிகளை மேற்கொள்வது என்பது பற்றி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.வெள்ள பாதிப்புமுதல்வர் உத்தரவுபடி, மாநிலத்தின் வெள்ள பாதிப்பு பகுதிகளை, அமைச்சர்கள் ஆய்வு செய்கின்றனர். நானும் கூட பல்வேறு இடங்களுக்கு செல்வேன்.களசே கிராம மக்களை இடம் மாற்ற, இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மக்கள் அங்கு அனுப்பப்படுவர்.

கார்வார் கூட்டத்துக்கு வரும் போது, கார் விபத்துக்குள்ளாகி, சித்தாபுரா பொதுப்பணித்துறை உதவி செயல் நிர்வாக பொறியாளர் இறந்தது வருத்தமளிக்கிறது.மற்ற மூன்று அதிகாரிகள், காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர். மனிப்பால் கே.எம்.சி., மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சையளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X