பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் பறிமுதல்| Dinamalar

பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் பறிமுதல்

Added : ஆக 08, 2021
Share
மாண்டியா : மாண்டியா மாவட்டம், பேபி மலையில் உள்ள முறைகேடாக இயங்கும் கல் குவாரிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சோதனை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாண்டியா கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 8 கி.மீ., தொலைவில் பேபி மலை அமைந்துள்ளது. இந்த மலையில் முறைகேடாக, 500 க்கும் அதிகமான கல் குவாரிகள் இயங்குகின்றன.இதனால், கே.ஆர்.எஸ்., அணைக்கு ஆபத்து

மாண்டியா : மாண்டியா மாவட்டம், பேபி மலையில் உள்ள முறைகேடாக இயங்கும் கல் குவாரிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சோதனை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டியா கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 8 கி.மீ., தொலைவில் பேபி மலை அமைந்துள்ளது. இந்த மலையில் முறைகேடாக, 500 க்கும் அதிகமான கல் குவாரிகள் இயங்குகின்றன.இதனால், கே.ஆர்.எஸ்., அணைக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக, பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், மாண்டியா மாவட்ட கலெக்டர் அஸ்வதி தலைமையிலான அதிகாரிகள் குழு, நேற்று, திடீரென பேபிமலையில் உள்ள கல் குவாரிகளில், சோதனை மேற்கொண்டனர்.பாறைகள் வெடிக்க பயன்படுத்தும் வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என்று, மத்திய வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, சிஜகுருலி, மாட்ரஹள்ளி, ஹொனகானஹள்ளி உட்பட வெவ்வேறு பகுதிகளில், வெடிக்காத வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.நாளை முதல் தொடர்ந்து சோதனை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இது குறித்து மாண்டியா மாவட்ட கலெக்டர் அஸ்வதி கூறுகையில், ''முறைகேடாக வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடாக கல் குவாரிகள் இயங்குவது குறித்து விசாரிக்கின்றோம்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X