அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒலிம்பிக் வீரர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

Added : ஆக 08, 2021
Share
Advertisement
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்: ஒலிம்பிக் போட்டியில், ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கும், மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகள். அவர்களால் பெருமை அடைந்துள்ளோம்.* முதல்வர் ஸ்டாலின்: இந்திய வரலாற்றில், ஒரு மகத்தான நாள். தடகளப் போட்டிகளில், ஒலிம்பிக் தங்கம் வெல்லும், இந்தியாவின் 120 ஆண்டு கால காத்திருப்பை

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்:

ஒலிம்பிக் போட்டியில், ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கும், மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகள். அவர்களால் பெருமை அடைந்துள்ளோம்.

* முதல்வர் ஸ்டாலின்:

இந்திய வரலாற்றில், ஒரு மகத்தான நாள். தடகளப் போட்டிகளில், ஒலிம்பிக் தங்கம் வெல்லும், இந்தியாவின் 120 ஆண்டு கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்த நீரஜ் சோப்ராவுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். நுாறு கோடி இதயங்களில், ஒரு புதிய நம்பிக்கை உணர்வை நீங்கள் விதைத்துள்ளீர்கள். உண்மையிலேயே நீங்கள் நாட்டின் நாயகன். அத்துடன், இந்தியாவுக்கு ஆறாவது பதக்கத்தை பெற்று தந்துள்ள, மற்போர் வீரர் பஜ்ரங் புனியாவுக்கு வாழ்த்துகள்.

* பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:

ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ள, ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகள். ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில், 100 ஆண்டுகளுக்கு பின், இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்த, அவரது சாதனை ஈடு இணையற்றது. ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை தங்கம் கிடைக்கவில்லை என்ற குறையை, நீரஜ் சோப்ரா நீக்கி உள்ளார். அவரது சாதனைப் பயணம் தொடரட்டும். ஒலிம்பிக்கில், இந்தியாவின் தங்க வேட்டை நீடிக்கட்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X