இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 08, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்பயங்கரவாதி கொலைஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் புத்கம் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். தப்பியோடிய மற்றொருவர் புல்வாமா மாவட்டம் கெரூ என்ற இடத்தில் கைது செய்யப்பட்டார்.மருத்துவமனையில் 'காஸ்' கசிவுமும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை கஸ்துாரிபா
today, crime, round up, இன்றைய, கிரைம், ரவுண்ட் அப்


இந்திய நிகழ்வுகள்பயங்கரவாதி கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் புத்கம் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். தப்பியோடிய மற்றொருவர் புல்வாமா மாவட்டம் கெரூ என்ற இடத்தில் கைது செய்யப்பட்டார்.

மருத்துவமனையில் 'காஸ்' கசிவு

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை கஸ்துாரிபா பொது மருத்துவமனையில் நேற்று 'காஸ்' கசிவு ஏற்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 பேர் உட்பட 58 நோயாளிகள் உடனடியாக வேறு கட்டடத்துக்கு மாற்றப்பட்டனர். ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன தொழில்நுட்ப ஊழியர்கள் காஸ் கசிவை சீரமைத்தனர்.

முதல்வரை கொல்ல முயற்சி: மூவர் கைது

அகர்தலா: வட கிழக்கு மாநிலமான திரிபுராவின் முதல்வர் பிப்லப் குமார் தேவ், சமீபத்தில் அகர்தலாவில் உள்ள தன் வீட்டருகே நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கார் வேகமாக வந்து அவர் மீது மோத முயன்றது. பிப்லப் குமார் தாவிக்குதித்து தப்பினார். அன்று இரவே அந்த கார் கண்டுபிடிக்கப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்; விசாரணை நடக்கிறது

இளைஞர் பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் உதய்புரியா என்ற கிராமத்தில் ராகேஷ்குமார் நாகர், 28, போட்டி தேர்வுக்கு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மொபைல் போனில் 'ப்ளூ டூத்' வாயிலாக இயங்கக் கூடிய ஹெட் போன் பயன்படுத்தி பயிற்சி வகுப்பில் பங்கேற்றார். அப்போது ஹெட் போன் திடீரென வெடித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


latest tamil news


'ஏ.கே., 47' ரக துப்பாக்கி கோயம்பேடில் பரபரப்பு

கோயம்பேடு : கோயம்பேடில், இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரிடம் இருந்த ஏ.கே., 47 ரக 'டம்மி' துப்பாக்கியால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்பேடு, 100 அடி சாலையில், நேற்று முன்தினம் இரவு, கோயம்பேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மடக்கி சோதனை செய்தனர்.அவரிடம், இரண்டு ஏ.கே., 47 துப்பாக்கிகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாலிபரை கோயம்பேடு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

இதில், அவை 'டம்மி' துப்பாக்கிகள் என, தெரியவந்தது. பிடிபட்டவர், பெரம்பூர், கஸ்துாரிபாய் காலனி, மூன்றாவது பிளாக்கைச் சேர்ந்த விக்டர், 27, எனவும், திரைப்பட இயக்குனர் பாண்டிராஜ் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிவதும் தெரியவந்தது.

பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடியில் நடக்கிறது. இதற்காக டம்மி துப்பாக்கிகளை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து காரைக்குடிக்கு அனுப்ப விக்டர் எடுத்து சென்றதும் தெரியவந்தது. விக்டரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


latest tamil news


மனைவி ஆடம்பரம்; கணவர் தற்கொலை

திருவொற்றியூர் : மனைவியின் ஆடம்பர செலவால் மனமுடைந்த கணவர், துாக்கிட்டு தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியது.

திருவொற்றியூர், கல்யாணி செட்டி தெருவைச் சேர்ந்த ஆனந்த், 35; மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி ரம்யா. தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.மனைவி, கணவருக்கு தெரியாமல், அவரது வங்கி கணக்கில் இருந்து, 4 லட்சம் ரூபாய் எடுத்து செலவழித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆனந்த் வங்கி கணக்கை திடீரென ஆய்வு செய்தபோது, பணம் குறைந்திருப்பது தெரியவந்தது. மனைவியிடம் கேட்டதற்கு, வீட்டு செலவுக்காக எடுத்ததாக கூறினார்.இதனால், மனமுடைந்த ஆனந்த், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுமி இறப்பிற்கு காரணமான வாலிபர் கொலை வழக்கில் கைது

பண்ருட்டி : பண்ருட்டி அருகே பாலியல் தொல்லை காரணமாக சிறுமி இறந்ததால் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சின்னபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்.விவசாயி; இவரது மகன் பாண்டியன்,19; இவர் 16 வயது சிறுமியை கடந்த ஏப்ரல் 20ம் தேதி திருமணம் செய்து கொள்ளுமாறு பாலியல் தொந்தரவு கொடுத்தார். புகாரின் பேரில் பாண்டியனை போக்சோ சட்டத்தில் பண்ருட்டி மகளிர் போலீசார் கைது செய்தனர்.

ஜாமினில் வெளியே வந்த பாண்டியன் மீண்டும் ஜூலை 26ம் தேதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். 'தன்னை திருமணம் செய்து கொள், இல்லையெனில் பூச்சிமருந்து சாப்பிட்டு இறந்து போ' என கூறி விஷ மருந்தை கொடுத்துள்ளார். மனமுடைந்த சிறுமி கடந்த 2 ம் தேதி விஷம் சாப்பிட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இது குறித்து சிறுமியின் தந்தை 4ம் தேதி புகார் கொடுத்தார். புதுப்பேட்டை போலீசார் கொலை முயற்சி மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து பாண்டியனை தேடி வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி பாண்டியனை புதுப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.


latest tamil news


2 கைகளும் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்ற பெண் சாவு

நெய்வேலி:என்.எல்.சி., இன்ஜினியர், மனைவியின் இரண்டு கைகளையும் வெட்டி துண்டாக்கி விட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், சிகிச்சை பெற்று வந்த மனைவியும் இறந்தார்.

கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த முதனை கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஉத்தண்டராயன், 47; என்.எல்சி., முதல் சுரங்கத்தில் இன்ஜினியர். இவரது மனைவி ஜெயசித்ரா, 45. மூன்று மகன்கள் உள்ளனர்.கடந்த 2ம் தேதி மதியம் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில், ஜெயசித்ராவின் இரண்டு கைகளையும் ஸ்ரீஉத்தண்டராயன் கத்தியால் வெட்டினார்.இதில் இரண்டு கைகளும் துண்டாகி விழுந்தன. இதனால் பயந்த ஸ்ரீ உத்தண்டராயன் துாக்கு போட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஜெயசித்ரா சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு இரண்டு கைகளும், அறுவை சிகிச்சை செய்து இணைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் சிகிச்சை பலனின்றி, நேற்று காலை 11:30 மணியளவில் ஜெயசித்ரா இறந்தார்.

போலி டாக்டர் அதிரடி கைது

குடியாத்தம்:குடியாத்தத்தில், போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் தாலுகா போலீசார் , சுகாதாரத் துறையினர் இணைந்து ஜிட்டப்பள்ளி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மஸ்தான், 38, என்பவர் பிளஸ் 2 படித்து விட்டு, கிளினிக் நடத்தி கொரோனாவுக்கு ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை அளித்து வந்ததும், எம்.பி.பி.எஸ்., படித்ததாக போர்டு வைத்திருந்ததும் தெரிந்தது.அவரை கைது செய்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆங்கில மருந்துகளை பறிமுதல் செய்தனர்.கிளினிக்கை மூடி, 'சீல்' வைத்தனர்.


latest tamil news


நகைக்காக மூதாட்டி கொன்று எரிப்பு கல்லுாரி மாணவர், நண்பர் கைது

கள்ளக்குறிச்சி:நகைக்காக மூதாட்டியை கொலை செய்து எரித்த வழக்கில், கல்லுாரி மாணவர் உட்பட இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்,மணலுார்பேட்டை அடுத்த கொழுந்திராம்பட்டு காட்டுப் பகுதியில், ஜூலை 14ல், அடையாளம் தெரியாத பெண் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

இறந்து கிடந்தவர், அத்திப்பாக்கம் வையாபுரி மனைவி பார்வதி, 65, என தெரிந்தது. கணவர், மூத்த மகன் இறந்துவிட்டனர். இளைய மகன் மற்றும் மகள் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். பார்வதி தனியாக வசித்த நிலையில், கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், இருவரை கைது செய்தனர். போலீசார் கூறியதாவது:மாடு மேய்க்கும் அருள்சகாயம், 19; பி.பி.ஏ., மூன்றாம் ஆண்டு படிக்கும் விஜய், 20, ஆகியோரை கைது செய்துள்ளோம்.அருள்சகாயம் பெற்றோர், மும்பையில் கூலி வேலை செய்கின்றனர். அருள்சகாயம் தனியாக வசிக்கிறார். இவர் மாடுகளை மேய்க்கும் போது, தினமும் பார்வதி வீட்டு வழியாக செல்வது வழக்கம்.

குடிப் பழக்கம் உடைய இவர், பணம் தேவைப்பட்டதால் மூதாட்டி நகைகளை பறிக்க திட்டமிட்டார்.ஜூலை 13ம் தேதி பார்வதியிடம், தனக்கு தெரிந்த ஒருவரிடம் குறி கேட்க அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். இதன்படி, தன் நண்பர் விஜய் பைக்கில் பார்வதியை அழைத்துச் சென்றுள்ளார்.மாலை, 6:30 மணியளவில் கொழுந்திராம்பட்டு காட்டுப் பகுதிக்குள் அருள்சகாயம், பார்வதியின் வாய், மூக்கை அழுத்தி பிடித்துள்ளார். விஜய், பார்வதியின் கைகளை பிடித்து கொண்டார்.

இதில் மூச்சுத் திணறி பார்வதி இறந்தார்.அவர் அணிந்திருந்த செயின், வளையல், மோதிரம், தோடு உள்ளிட்ட 6 சவரன் தங்க நகைகளை அருள் சகாயம் எடுத்துக்கொண்டு, பிரச்னை முடிந்ததும் பணம் தருவதாக விஜயிடம் தெரிவித்து உள்ளார். பைக்கில் இருந்த பெட்ரோலை, பார்வதி உடல் மீது ஊற்றி எரித்து விட்டு தப்பியுள்ளனர்.இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X