பாகிஸ்தானில் கோவிலை சூறையாடிய 20 பேர் கைது

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 08, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
லாகூர்-பாகிஸ்தானில் ஹிந்து கோவில் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.நம் அண்டை நாடான பாக்.,ன் பஞ்சாப் மாகாணம் போங்க் நகரில் ஹிந்துக்கள் கணிசமாக வசிக்கின்றனர். சமீபத்தில் ஒரு கும்பல், போங் நகரில் உள்ள பிள்ளையார் கோவிலை சூறையாடி தீ வைத்தது. கடவுள் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.இது தொடர்பாக பாக்., உச்ச நீதிமன்ற

லாகூர்-பாகிஸ்தானில் ஹிந்து கோவில் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.



latest tamil news


நம் அண்டை நாடான பாக்.,ன் பஞ்சாப் மாகாணம் போங்க் நகரில் ஹிந்துக்கள் கணிசமாக வசிக்கின்றனர். சமீபத்தில் ஒரு கும்பல், போங் நகரில் உள்ள பிள்ளையார் கோவிலை சூறையாடி தீ வைத்தது. கடவுள் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.இது தொடர்பாக பாக்., உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது, தானாக வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறார்.

இதுபோன்ற சம்பவங்கள் உலகளவில் பாகிஸ்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக கூறிய நீதிபதி, நடந்த சம்பவம் குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்யவும், கோவிலை புனரமைக்கவும் உத்தரவிட்டார்.


latest tamil news


இதையடுத்து, நேற்று இந்த வன்முறை தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 150 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கோவில் புனரமைப்பு பணிகள் துவங்கிஉள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஆக-202111:04:45 IST Report Abuse
Suriya Krishnan இவர்கள் பெரும்பான்மை உள்ள நாடுகளில் இதுதான் நடக்கும். ஆகையால் இந்துக்கள் யோசித்து ஒன்றுபடவேண்டும். இங்கிலாந்தை இப்போதே இஸ்லாமிய நாடாக்க போராட்டங்கள் செய்கின்றனர்.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
08-ஆக-202110:08:06 IST Report Abuse
 N.Purushothaman சிறுபான்மையினரின் உயிரையும் உடமையையும் கோயில்களையும் சூறையாடும் அளவிற்கு அந்த நாட்டுல மத சுதந்திரம் இருப்பது ஆச்சிரயமளிக்கவில்லை ......அதுக்கு இங்கே இருக்கிறவனுங்க முட்டு கொடுக்கறது அதிர்ச்சி அளிக்கவும் இல்லை ...
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
08-ஆக-202110:02:41 IST Report Abuse
 N.Purushothaman பாகிஸ்தானுக்கு இங்க ஊழியம் செய்யும் அறிவுஜீவிகள் வரலாறு தெரியாமல் ஊளை இடுவது ஒன்றும் புதிதல்ல .....பாகிஸ்தானில் சுதந்திரத்திற்கு முன்பிருந்த இந்துக்கள் எண்ணிக்கை மற்றும் கோயில்களின் எண்னிக்கை எல்லாம் இவனுங்களுக்கு தெரியாது ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X