பொது செய்தி

தமிழ்நாடு

கவர்ந்திழுக்கும் கார்விங் பென்சில் கலை பரிசாக தருபவரும், பெறுபவரும் பரவசம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
சிவகாசி: கலை என்பது நுட்பமமான தன்மை ,திறமையை உள்ளடக்கியது. ஓவியம், சிற்பம் உள்பட பல்வேறு வகையான செயல்களும் கலையில் அடங்கும். கலை படைப்புகள் என்பது மனித படைப்பாற்றலின் விளைவாக உருவாகும். எந்த கலையாக இருந்தாலும் அதை உருவாக்குபவரின் தனிப்பட்ட சிந்தனையும் இடம் பெறும்.பொதுவாக பிறந்தநாள், திருமணம் உள்ளிட்ட நல்ல நிகழ்ச்சிகளுக்கு அன்பை வெளிப்படுத்தும் விதமாக பரிசு

சிவகாசி: கலை என்பது நுட்பமமான தன்மை ,திறமையை உள்ளடக்கியது. ஓவியம், சிற்பம் உள்பட பல்வேறு வகையான செயல்களும் கலையில் அடங்கும். கலை படைப்புகள் என்பது மனித படைப்பாற்றலின் விளைவாக உருவாகும். எந்த கலையாக இருந்தாலும் அதை உருவாக்குபவரின் தனிப்பட்ட சிந்தனையும் இடம் பெறும்.பொதுவாக பிறந்தநாள், திருமணம் உள்ளிட்ட நல்ல நிகழ்ச்சிகளுக்கு அன்பை வெளிப்படுத்தும் விதமாக பரிசு வழங்குவது வழக்கம். அவரவர் வசதிக்கு ஏற்ப பரிசு பொருட்களை வழங்குவர். ஆனால் தற்போது கார்விங் பென்சில் கலையால் உருவாக்கப்பட்டதை பரிசாக வழங்குவதை பெரும்பாலோனோர் விரும்புகின்றனர்.தரமான பென்சிலின் வெளிப்புறத்தை தேவைக்கேற்ப சீவிஅதிலுள்ள கார்பனில் பெயர் பொறிக்கப்படுவதை கார்விங் பென்சில் கலை என்றழைக்கிறோம். இதை உருவாக்குவதற்கு பொறுமை மிகவும் அவசியம். சிறிய கவன குறைவு என்றாலும் பென்சில் உடைந்து விடும்.மீண்டும் மற்றொரு பென்சிலில் வேலை செய்ய வேண்டும். கூர்மையான கத்தி இதற்கு பயன்படுகிறது. சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்த பட்டதாரி பெண் ஜெர்ரிஸ் கிரிஸ்டோபல் இந்த கலையை சர்வ சாதாரணமாக செய்கிறார். ஒவ்வொரு பெயரை பொறிக்கையில் சில நேரங்களில் 2 மணி நேரம் வரை செலவாகிறது.விரும்புவரின் பெயரை பென்சிலின் கார்பனில் எழுதி அதை மெசேஜ் பாட்டிலில் வைத்து அழகாக தரப்படுகிறது. கீ செயின் , டாலர் போன்றும் வடிவமைத்து தருகிறார். இது போன்ற பரிசு பொருளை தருபவரும், பெற்று கொள்பவரும் பெருமையாக கருதுகின்றனர். இது பல ஆண்டுகளுக்கு அப்படியே இருப்பதால் நினைவுகளும் அப்படியே இருக்கும்.யூடியூப்பில் கற்றவைஜெர்ரிஸ் கிரிஸ்டோபல்:இக் கலை ஒரு கைவினை செயலாகும். பொறுமை மிகவும் அவசியம். சற்று கவனம் சிதறினாலும் கத்தி கையை கிழித்து விடும். கொரோனா காலத்தில் யூடியூப் பில் பார்த்து நானாகவே கற்று கொண்டேன்.தேவைப்படுபவர்கள் அலைபேசியில் ஆர்டர் தருகின்றனர். பெரும்பாலும் பிறந்தநாள் பரிசாக இது வழங்கப்படுகிறது. எந்த ஒரு நல்ல நிகழ்ச்சியாக இருந்தாலும் அதற்கு இதை பரிசாக வழங்கலாம்,என்றார். தொடர்புக்கு: 96003 90696.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X