பொது செய்தி

தமிழ்நாடு

'கொடை'யில் பாதுகாப்பற்ற கூடார சுற்றுலா; கலெக்டர் எச்சரிக்கை

Added : ஆக 08, 2021
Share
Advertisement
கொடைக்கானல்,-கொடைக்கானல் மலைப்பகுதியில் கூடார (டென்ட்) அமைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் விசாகன் எச்சரித்துள்ளார்.கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர மர வீடு, கிராமிய சுற்றுலா, டென்ட் அமைத்து தங்குவது என புதுமை புகுத்தப்படுகிறது. சமீபகாலமாக பட்டா மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் அனுமதியின்றி 'டென்ட்' அமைத்து பயணிகள் தங்குவதாக புகார்

கொடைக்கானல்,-கொடைக்கானல் மலைப்பகுதியில் கூடார (டென்ட்) அமைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் விசாகன் எச்சரித்துள்ளார்.

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர மர வீடு, கிராமிய சுற்றுலா, டென்ட் அமைத்து தங்குவது என புதுமை புகுத்தப்படுகிறது. சமீபகாலமாக பட்டா மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் அனுமதியின்றி 'டென்ட்' அமைத்து பயணிகள் தங்குவதாக புகார் எழுகிறது.இவர்களுக்கு வனவிலங்கு அச்சுறுத்தல், விஷ, ஜந்து நடமாட்டம் போன்றவற்றுடன், மது போதை கேளிக்கை, பயர் கேம்ப், போதை வஸ்து பயன்படுத்துவது நடக்கிறது.வெளி மாநில இளைஞர்கள் பலர் இதில் தங்குகின்றனர். இதற்கு மத்தியரசு வழிகாட்டுதல்படி அனுமதி பெற வேண்டும். ஆனால் அனுமதியின்றி பாறைப்பட்டி, புலியூர், கூக்கால், கிளாவரை என மேல்மலையில் தங்க வைக்கின்றனர். வெளிமாநில இளைஞர்களால் கொரோனா பரவலுக்கும் வாய்ப்புள்ளது.இந்நிலையில் கலெக்டர் வெளியிட்ட அறிக்கை: மலைப்பகுதியில் பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களில் கூடாரங்கள் அமைத்து தங்குவோர் மற்றும் ஏற்பாடு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், எனத் தெரிவித்துள்ளார். வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பெரும்பாலான கூடாரங்கள் அரசு அனுமதி பெறவில்லை. இதுபற்றிய விவரம் சேகரித்து, நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X