சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதை வாலிபருக்கு அடி உதை

Added : ஆக 08, 2021
Share
Advertisement
திண்டுக்கல்,- -திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய போதை வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டுக்கு தினசரி பலநுாறு பஸ்களும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில போதை ஆசாமிகள் சில்மிஷ வேலைகளில் ஈடுபடுவதும் நடக்கிறது.நேற்று ஒரு போதை வாலிபர் பெற்றோரை விட்டு சற்று தள்ளி

திண்டுக்கல்,- -திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய போதை வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டுக்கு தினசரி பலநுாறு பஸ்களும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில போதை ஆசாமிகள் சில்மிஷ வேலைகளில் ஈடுபடுவதும் நடக்கிறது.நேற்று ஒரு போதை வாலிபர் பெற்றோரை விட்டு சற்று தள்ளி நின்ற சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். அந்தச் சிறுமிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து நழுவிய அந்தநபரை பொதுமக்கள் தேடி பிடித்தனர். சிறுமி அடையாளம் காட்ட, அந்தநபர் போதையில் வாய்க்கு வந்தபடி திட்டியுள்ளார்.உடனே பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். அடிவாங்கியபடி அந்நபர் ஓட்டம் பிடித்தார். இது போன்ற இடையூறுகளை தவிர்க்க போலீசார் எந்நேரமும் ரோந்து பணியில் இருக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X