பொது செய்தி

தமிழ்நாடு

பழநி வந்த பக்தர்கள் ஏமாற்றம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
பழநி--பழநி கோயில் தரிசனத்திற்கு நேற்று முன் தினம் முதல் வெள்ளி, சனி, ஞாயிறு பக்தர்கள் அனுமதியில்லை என அரசு அறிவித்தது.வார இறுதி நாட்களில் மலைக்கோயிலில் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். நேற்று உள்ளூர், வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்தனர். நேற்று கோயில் சார்பாக எந்த முன்னறிவிப்புமின்றி தரிசனத்திற்கு அனுமதி பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். பாத

பழநி--பழநி கோயில் தரிசனத்திற்கு நேற்று முன் தினம் முதல் வெள்ளி, சனி, ஞாயிறு பக்தர்கள் அனுமதியில்லை என அரசு அறிவித்தது.வார இறுதி நாட்களில் மலைக்கோயிலில் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். நேற்று உள்ளூர், வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்தனர். நேற்று கோயில் சார்பாக எந்த முன்னறிவிப்புமின்றி தரிசனத்திற்கு அனுமதி பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். பாத விநாயகர் கோயில், திருஆவினன்குடி கோயில் உட்பட கிரி வீதியில் உள்ள கோயில் வாயில் முன்பு நின்று வழிபட்டு சென்றனர்.வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயில் நேற்று காலை திறந்து சில மணி நேரத்தில் அடைக்கப்பட்டது. புதிய கட்டுப்பாடுகள் ஆக. 9 முதல் தானே என்று வழக்கம்போல கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

செயல் அலுவலர் மாலதி கூறுகையில், 'மாவட்ட அளவில் வழங்கப்பட்ட உத்தரவு படியே நேற்றும், இன்றும் பக்தர்கள் அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது. வழக்கமான வழிபாடுகள் தடையின்றி நடக்கும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X