பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்... மாற்று இடத்தில் மாட்டுச்சந்தை

Added : ஆக 08, 2021
Share
Advertisement
மாற்று இடத்தில் மாட்டுச்சந்தைதிருப்பூர், தென்னம்பாளையத்தில் வாரந்தோறும் திங்கள்தோறும் மாட்டுச்சந்தை நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக, நான்கு மாதமாக மாட்டுச்சந்தை நடக்கவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், சந்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என கலெக்டர், மாநகராட்சி கமிஷனரிடம் கால்நடை வியாபாரிகள் மனு அளித்தனர். ஆனால், சந்தை நடத்த அனுமதி அளிக்க முடியாது என மறுத்து
 சில வரி செய்திகள்...  மாற்று இடத்தில் மாட்டுச்சந்தை

மாற்று இடத்தில் மாட்டுச்சந்தைதிருப்பூர், தென்னம்பாளையத்தில் வாரந்தோறும் திங்கள்தோறும் மாட்டுச்சந்தை நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக, நான்கு மாதமாக மாட்டுச்சந்தை நடக்கவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், சந்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என கலெக்டர், மாநகராட்சி கமிஷனரிடம் கால்நடை வியாபாரிகள் மனு அளித்தனர். ஆனால், சந்தை நடத்த அனுமதி அளிக்க முடியாது என மறுத்து விட்டனர்.

மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், 'மாட்டுச்சந்தைக்கு, மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, நில அளவீடு பணி நடந்துள்ளது. கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் இறுதி செய்யும் இடத்தில், சந்தை நடக்க அனுமதி வழங்கப்படும்,' என்றனர்.விழிப்புணர்வு பிரசாரம்திருப்பூரில் செயல்படும் தினசரி மார்க்கெட், தென்னம்பாளையம் சந்தை வளாகம் ஆகியன வழக்கம் போல் இயங்கி வருகின்றன. மார்க்கெட் மற்றும் சந்தை வளாகத்தில் சுகாதார துறையினர் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கடைகளுக்கு வருவோர் சமூக இடைவெளி பின்பற்றுதல், முக கவசம் அணிதல் ஆகியன கண்காணிக்கப்படுகிறது. முக கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. சந்தை வளாகத்தில் காய்ச்சல் கண்டறிதல், கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. வார இறுதி நாட்களாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கவனம் செலுத்தி, பணியாற்ற சுகாதார பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அம்மனுக்கு அபிஷேகம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு கொடுவாய் ஒன்றிய ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், பெருந்தொழுவு மற்றும் தொங்குட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட, 11 இடங்களில் அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேக விழா ஒன்றிய பொது செயலாளர் ஜெயபாரதி தலைமையில் நடந்தது. ஹிந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலாளர் ஆனந்த், பா.ஜ., மண்டல தலைவி மைதிலி,ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் மாயக்கண்ணன் பங்கேற்றன். ஏற்பாடுகளை ஒன்றிய பொறுப்பாளர் கணேஷ், ஹிந்து முன்னணி பெருந்தொழுவு ஊராட்சி பொறுப்பாளர் மணி, இளைஞர் முன்னணி பொறுப்பாளர் சசிகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

தாய்ப்பால் வார விழாதிருப்பூர், டி.எஸ்.கே., மாநகராட்சி நகர் நல மையத்தில், ரோட்டரி திருப்பூர் 'டிரீம்சிட்டி' மற்றும் ஸ்மார்ட்சிட்டி சங்கங்கள் இணைந்து உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடினர். மாநகராட்சி மகப்பேறு மருத்துவர் பாரதி,'தாய்ப்பாலின் முக்கியத்துவம்,' குறித்து பேசினார். டிரீம்சிட்டி சங்க தலைவர் சீனுவாசன், செயலாளர் திருமுருகன், பொருளார் பாரதி, ஸ்மார்ட்சிட்டி ரோட்டரி தலைவர் செந்தில்குமார், மாவட்ட ஒருங்கினைப்பாளர் தனசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு புரோட்டீன் பவுடர் வழங்கப்பட்டது. டாக்டர். கவிதாலட்சுமி நன்றி கூறினார்.

30 டன் முருங்கை வர்த்தகம்வெள்ளகோவில் அடுத்த புதுப்பையில் உள்ள முருங்கை கொள்முதல் நிலையத்தில், முருங்கை வாங்கி, மொத்த வெளி மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் அனுப்புகின்றனர். மர முருங்கை கிலோ, 3 ரூபாய், செடி முருங்கை, 4 மற்றும் கரும்பு முருங்கை, 5 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வியாபாரி கனகராஜ் கூறுகையில், ''வெளி மார்க்கெட்டில், முருங்கை விற்பனை தற்போது குறைந்துள்ளது. இதனால், கிலோவுக்கு, 7 - 8 ரூபாய் வரை குறைவாக விற்பனையாகிறது. விலை குறைவாக இருப்பதால் விவசாயிகள் கவலைப்படுகின்றனர்,'' என்றனர்.
ஆய்வுக்கூட்டம்வெள்ளகோவில் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆய்வு கூட்டம் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் வீடுகளுக்கு நேரடியாக சென்று குடும்பத்தில் உள்ள நபர்கள் குறித்து, சிறியவர் முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் வரை கணக்கெடுத்து தடுப்பூசி போட்டு கொண்டவர்கள், போடாதவர்கள் பட்டியலை துல்லியமாகக் கணக்கிட வேண்டும். உடல்நலக் குறைவுடன் இருக்கிறார்களா எனவும் கணக்கு எடுக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டது.

சாரண இயக்க செயற்குழுதிருப்பூர் கல்வி மாவட்ட பாரத சாரண, சாரணியர் இயக்க செயற்குழு கூட்டம் காந்திநகர், ஏ.வி.பி., பள்ளியில் நடந்தது. மாவட்ட சாரண இயக்க ஆணையர் முருகசாமி தலைமை வகித்தார். செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி, ஏ.வி.பி., கல்வி நிறுவன குழும செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் பேசினார். உதவி செயலாளர் தனசிங், 2021-22 ஆண்டின் செயல்திட்டத்தினை, மாவட்ட பயிற்சி ஆணையர் சுதாலட்சமியிடம் சமர்ப்பித்தார். மேல்நிலை, கல்லுாரி மாணவர்களுக்கான, 'திரி சாரணர் பிரிவு' துவக்குதல் குறித்து மாநில உதவி ஆணையர் சீனிவாஸ் விளக்கினார். மாவட்ட அமைப்பு ஆணையர் மணிவேல் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மாவட்ட உதவி ஆணையர் ராஜாராம் செய்தார்.

காத்திருக்கும் அபாயம்

இந்திய கம்யூ., கிளை செயலாளர்கள் சசிக்குமார், செந்தில்குமார் ஆகியோர், மாநகராட்சி 2ம் மண்டல உதவி கமிஷனரிடம் கொடுத்த மனுவில், 'பிச்சம்பாளையம் புதுாரில், பொதுக்கிணறு உள்ளது. அதன் பாதுகாப்பு சுவர் மிகவும் மோசமான நிலையில், எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அருகே வீடுகள் உள்ளன. அப்பகுதியில் குழந்தைகள் விளையாடுவது வழக்கம். பொதுமக்கள் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சுற்றுச்சுவரை பலப்படுத்த வேண்டும்,' என தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X