தமிழ்நாடு

கூட்டுறவுத் துறை கேட்கும் விவரங்களால் நிர்வாகிகள் அச்சம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
கொடைரோடு,-கூட்டுறவு சங்க நகைக் கடன் தள்ளுபடி தொடர்பாக கூடுதல் விவரங்களை கேட்பதால் நிர்வாகிகள் அச்சத்தில் உள்ளனர்.தேர்தல் நேரத்தில் கூட்டுறவு சங்கங்களில் அடகு வைக்கப்பட்ட 5 பவுன் வரையான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க., வாக்குறுதியாக அறிவித்தது. அக்கட்சி அரசு அமைத்ததும் எப்போது நகைக்கடன் தள்ளுபடியாகும் என பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பில்

கொடைரோடு,-கூட்டுறவு சங்க நகைக் கடன் தள்ளுபடி தொடர்பாக கூடுதல் விவரங்களை கேட்பதால் நிர்வாகிகள் அச்சத்தில் உள்ளனர்.

தேர்தல் நேரத்தில் கூட்டுறவு சங்கங்களில் அடகு வைக்கப்பட்ட 5 பவுன் வரையான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க., வாக்குறுதியாக அறிவித்தது. அக்கட்சி அரசு அமைத்ததும் எப்போது நகைக்கடன் தள்ளுபடியாகும் என பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இந்நிலையில் கூட்டுறவுத் துறையிடம் இருந்து கடன் சங்கங்களிடம் பல்வேறு தரவுகளை விவரங்களாக கேட்டு அதிகாரிகள் அவ்வப்போது தபால் அனுப்பி பதில் தர உத்தரவிட்டுள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஜனவரியில் விவசாய கடன் தள்ளுபடியில் பயன்பெற்று மீண்டும் நகைக் கடன் பெற்றவர்கள், அரசு, பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், கூட்டுறவு பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர், வருமான வரி செலுத்துவோர், 10 எக்டேர் நிலம் உள்ள விவசாயிகள், ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் கடன் பெற்றவர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர், கார் வைத்திருப்போர் என விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.இப்பட்டியல் ஏப். 30ம் தேதி நிலவரப்படி கேட்கப்பட்டுள்ளது.

அரசு கேட்டுள்ள புதிய பட்டியலின்படி மேற்கண்டோருக்கு தள்ளுபடி கிடைக்காதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன்படி அலுவலர்கள் பட்டியல் தயாரிக்க திணறி வருகின்றனர். இப்பட்டியலின்படி கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் அதிகம் பயன் பெற்று இருந்தால் அவர்களின் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X