பொது செய்தி

தமிழ்நாடு

மாநில தடகளத்தில் ஜொலித்த வீரர்... வாழ்க்கை தடத்தில் ஜெயிக்க ஓடுகிறார்

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 08, 2021
Share
Advertisement
ஒலிம்பிக் கோலாகலம் நடுவே பயிற்சியாளரின் நிஜ 'சோகம்' ஒலிம்பிக்கில், பளுதுாக்குதல், மல்யுத்தம், இறகு பந்து, ஹாக்கி என, இந்திய வீரர், வீராங்கனைகள் அடுத்தடுத்த பதக்கங்களை அள்ளியுள்ளனர்; நுாலிழையிலும் பதக்கங்கள் தவறவிடப்பட்டுள்ளன. தவற விட்ட பதக்கங்களும், விளையாட்டு மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது.மறுபுறம், 'பள்ளிகளில் உடற்கல்வி வகுப்பு முறையாக
மாநில தடகளம், வீரர், வாழ்க்கை,  ஓடுகிறார்


ஒலிம்பிக் கோலாகலம் நடுவே பயிற்சியாளரின் நிஜ 'சோகம்'


ஒலிம்பிக்கில், பளுதுாக்குதல், மல்யுத்தம், இறகு பந்து, ஹாக்கி என, இந்திய வீரர், வீராங்கனைகள் அடுத்தடுத்த பதக்கங்களை அள்ளியுள்ளனர்; நுாலிழையிலும் பதக்கங்கள் தவறவிடப்பட்டுள்ளன. தவற விட்ட பதக்கங்களும், விளையாட்டு மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது.

மறுபுறம், 'பள்ளிகளில் உடற்கல்வி வகுப்பு முறையாக இல்லை; தரமான மைதானங்கள் இல்லை' போன்ற விவாதங்களும் சூடுபிடித்துள்ளன.இதற்கிடையில், குழந்தைகளிடம் விளையாட்டு ஆர்வத்தை விதைக்கும் உடற்கல்வி ஆசிரியரின் நிலையை பேச இங்கு யாரும் இல்லையோ என, ஆதங்கப்பட வைக்கிறார் திருப்பூரை சேர்ந்த தடகள பயிற்சியாளர் சிவானந்தம், 43.ஊரடங்கால் பள்ளிகள் ஆன்லைன்மயமாக, தனியார் பள்ளியில் பணிபுரிந்து, வேலை இழந்து, தற்போது, அதிகாலை தடகள பயிற்சி, மீதி நேரத்தில் கட்டடம் கட்டும் பணிக்கு சென்று காலத்தை ஓட்டிவருகிறார்.

அவரிடம் பேசியபோது...சொந்த ஊர் அரியலுார் மாவட்டம், கீழப்பழுவூர். கடந்த, 15 ஆண்டுகளாக திருப்பூர், காங்கேயம் ரோடு, புதுப்பாளையத்தில் வசிக்கிறேன். ஐ.டி.ஐ., படிக்கும்போது, 5 ஆயிரம், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழக அளவில் முதலிடம் பெற்றேன்.என் திறமையை அங்கீகரித்த திருச்சி துாயவளனார் தன்னாட்சி கல்லுாரி, விளையாட்டு பிரிவில் பி.ஏ., தமிழ் படிப்பில் சேர இலவசமாக இடம் கொடுத்தது. பாரதிதாசன் பல்கலை அளவில், 1,500 மீ, 5 ஆயிரம் மீட்டர், 21 கி.மீ (அரை மராத்தான்) போட்டிகளில் வென்றேன், பின் குடும்ப சூழ்நிலை காரணமாக திருப்பூரில் குடியேறினோம்.

தொடர்ந்து, மதுரை மராத்தான் போட்டியில் முதலிடம் கிடைத்தது.உடல் உறுப்புகளின் செயல்பாடுகள், அவற்றை வலிமைப்படுத்துதல், நோயின்றி வாழ்தல் ஆகியவற்றை வலியுறுத்தி, 'காய சம்பத்' எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டேன். மூத்தோர்கள் தடகளப்போட்டியில் திருப்பூர் மாவட்ட அளவிலும், தமிழ்நாடு மாநில அளவிலும், தேசிய அளவிலும் முதலிடம் கிடைத்தது. எனது பெண் குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் குடும்ப பாரத்தை சுமக்க, கட்டட வேலைக்கு செல்கிறேன்.என்று சிவானந்தம் கூறிய போது, கொரோனாவால் வருமானம் இழந்தவர்களின் வலி புரிந்தது.
அவரை தொடர்பு கொள்ள, 97884 33317 என்ற எண்ணில் அழைக்கலாம்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X